ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீப கொப்பரை இறக்கப்பட்டது...

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீப கொப்பரை இறக்கப்பட்டது...

திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியிலிருந்து இறக்கப்பட்டது. ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆகும். அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக  பஞ்சமூர்த்திகள் கோவிலில் உள்ள 5ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மேலும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்களாக சிறப்பாக நடைபெற்று கடந்த நவம்பர் 19ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவிலுக்கு பின்புறமுள்ள  2668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் 5.9 அடி உயரமுள்ள கொப்பரையில் 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 11 நாட்கள் மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் தீப தரிசனம் நிறைவு பெற்றது. பின்னர் மலையின் உச்சியில் இருந்து கொப்பரை இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு திருக்கோவிலுக்கு கொண்டு வந்து ஆயிரங்கால் மண்டபத்தில் மகாதீப கொப்பரை வைக்கப்பட்டு கொப்பரைக்கு திருக்கோவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

இந்த கொப்பரையில் உள்ள நெய்யை பயன்படுத்தி அண்ணாமலையார் கோயிலில் மை தயார் செய்யப்படும். இந்த மையினை வருகின்ற 2ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்யப்படும்.

மேலும் படிக்க... துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சிவன் ஸ்லோகம்

First published:

Tags: Thiruvannamalai