ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

நாளை கார்த்திகை அமாவாசை.. செய்ய வேண்டிய விரத முறைகள்.. கிடைக்கும் பலன்கள்!

நாளை கார்த்திகை அமாவாசை.. செய்ய வேண்டிய விரத முறைகள்.. கிடைக்கும் பலன்கள்!

அமாவாசை

அமாவாசை

கார்த்திகை மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமாவாசை அன்று பித்ருக்களுக்கு உரிய பூஜை முறைகளை செய்வது வழக்கம். அது மட்டும் அல்லாமல் அமாவாசை தினத்தில் காகத்திற்கு சாதம் வைப்பது, பசு மாட்டிற்கு வாழைப்பழம் அகத்துக்கீரை கொடுப்பது போன்றவையும் செய்யப்படுகிறது. மேலும் அந்த நாளில் குலதெய்வம் வழிபாடும் மேற்கொள்வது நல்லது. அப்படியான விசேஷமான இந்த அமாவாசை கார்த்திகை மாதத்தில் வருவதும் இன்னும் சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.

இந்த மாதத்தில் நாளை காலை 6.35 மணிக்கு துவங்கும் அமாவாசை திதியில் இந்த விஷயங்களை செய்யும் பொழுது உங்களுக்கு நோய் நொடிகள் அண்டாது. தீராத பிணிகள் தீர கார்த்திகை அமாவாசையில் நாம் மறக்காமல் செய்ய வேண்டியது என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

அதிகாலையிலேயே குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரேமற்ற பூஜைகளை செய்ய வேண்டும்.

கார்த்திகை அமாவாசையான நாளை காலையிலோ அல்லது மாலையிலோ அன்னதானம் செய்வது நல்லது. பசு மாடுகளுக்கு பழம் அல்லது உணவு அளிப்பது நல்லது. அத்துடன் நம் முன்னோர்களுக்கு அமாவாசையன்று தர்ப்பணம் செய்வதும் சிறப்பு.

Also see... இன்று கார்த்திகை மாத சிவராத்திரி... சிவனை வழிப்பட்டால் கவலைகள் நீங்கும்

அப்படி செய்வதினால் முன்னோர்கள் நம்மை நன்கு ஆசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். மேலும் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சுக சம்பத்துக்கள் ஆகியவை சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Mahalaya Amavasai, Worship forefathers