முகப்பு /செய்தி /ஆன்மிகம் / காரடையான் நோன்புக்கு அடை செய்ய பிளான் இருக்கா? இதோ ரெசிபி..!

காரடையான் நோன்புக்கு அடை செய்ய பிளான் இருக்கா? இதோ ரெசிபி..!

காரடையான் நோன்பு அடை

காரடையான் நோன்பு அடை

karadaiyan nonbu | பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் ஒரு அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் இந்த அடையை சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டியாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க மாசி மாதத்தின் இறுதியும், பங்குனி மாதத்தின் முதல் தேதியிலும் சாவித்திரி நோன்பு என்னும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பார்கள். இந்த நோன்பின் போது பெண்கள் நெய்வேத்தியத்திற்காக காரம் அல்லது இனிப்பு அடையை செய்வது வழக்கம். இந்த வருட காரடையான் நோன்பு மார்ச் மாதம் 14 ஆம் தேதி வருகிறது.

தேவையான பொருட்கள்

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்

காராமணி 1/4 கப்

தேங்காய் - அரை கப் வெல்லம்

1 கப் ஏலக்காய் தூள்

1 டீ ஸ்பூன் தண்ணீர் 2 கப்

காரடையான் நோன்பு

செய்முறை:

1. முதலில் காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.

3. வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள" என்று கொதிக்கும்போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும்.

4. வறுத்து வைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும்.

Also see... தேங்காய் சேர்க்காமல் வெள்ளை சட்னியா..? இதோ ரெசிபி...

5. இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். இப்போது சுவையான காரடையான் நோன்பு அடை ரெடி...

First published:

Tags: Food