மனம் போல் மாங்கல்யம் கிடைக்க திருமணமாகாத பெண்கள் காரடையான் நோன்பு விரதம் இருப்பார்கள். திருமணமான பெண்கள் கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்கவும் நோய் நொடியில்லாத வாழ்க்கை அமைய வேண்டியும் இந்த காரடையான் நோன்பு விரதத்தை கடைபிடிப்பார்கள். இந்த வருடம் மார்ச் 15ஆம் தேதியான இன்று (பங்குனி 1ஆம் தேதி) காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
1. காரடையான் நோன்பு அன்று அதிகாலையிலேயே எழுந்து நைவேத்தியம், பூஜைக்கு தேவையானவற்றை தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். புதன்கிழமை காலை 06.31 முதல் 06.47 வரை நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தாலி சரடினை மாற்றிக் கொள்ளலாம்.
2. சுப முகூர்த்த ஹோரை பார்த்தே தெய்வ திருமணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நாள் மட்டுமே கணக்கு என்பதனால் இது போன்ற முக்கிய விரத நாட்களை தவறவிட்டு விடாமல் அந்த நாட்களில் தாலி சரடினை மாற்றிக் கொள்வது சிறப்பானது.
3.காரடையான் நோன்பு விரதம் இருக்கும் பெண்கள் மோர், தயிர், பால் போன்ற பொருட்களை சாப்பிடக்கூடாது.
4.காரடையான் நோன்பு அன்று உருகாத வெண்ணைய் படைத்து அம்பாளை வழிபட வேண்டும்.
5. ஒரு வாழை இலையை வைத்து அதில் இனிப்பு, காரம் என இரண்டு கார் அரிசியினால் செய்யப்பட்ட அடையும், உருக்காத வெண்ணெய்யும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப் பழங்களும் வைக்க வேண்டும்.
Also see... தோஷங்களை நீக்கி மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு... விரதம் இருக்கும் முறைகள்..!
6. அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அவற்றுக்கு எதிரே அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும்.
7. விரதம் அன்று செய்த அடையை சிறிது மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து, பசுவை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். அதனால் தான் விரதத்தின் போது பால், தயிர் பொருட்களை சாப்பிடக்கூடாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple