முகப்பு /செய்தி /ஆன்மிகம் / காரடையான் நோன்பு எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்....

காரடையான் நோன்பு எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்....

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு

Karadaiyan Nonbu 2022 | காரடையான் நோன்பு என்பது திருமணமான பெண்களால் அனுசரிக்கப்படும் முக்கியமான நிகழ்வாகும். இறைவன் தங்களின் கணவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்வர். மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவதுதான் காரடையான் நோன்பு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

சுமங்கலி பெண்கள் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் மகத்தான விரத நாள் தான் இது. மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது. காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்ரி விரதம் என்றெல்லாம் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. சௌபாக்ய கௌரி விரதம் என்று ஆந்திராவிலும் கர்நாடக மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது.

வடக்கில் சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம், ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. எந்தப் பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன் பூரண ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் விரதத்தின் நோக்கமாகும்.

காரடையான் நோன்பு விரதம் இருக்கும் முறை

கார் அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்த நாளில் மஞ்சள் பூசிய நோன்புக்கயிற்றை பெண்கள் கட்டிக்கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக்கயிற்றையும் கட்டிக்கொள்வார்கள். 'மாசிக்கயிறு பாசி படியும்' என்ற சொலவடைக்கு ஏற்ப, பங்குனி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். படைக்கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இந்த விரதம் இருந்தால், திருமணமான பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காரடையான் நோன்பு தேதி, நேரம்

சூரிய உதயம்மார்ச் 14, 2022 6:40 AM
சூரிய அஸ்தமனம்மார்ச்  14, 2022 6:31 PM
காரடையான் நோன்பு தேதி, நேரம்மார்ச்  14, 6:40 AM - மார்ச்  15, 12:21 AM
மஞ்சள் சரடு முகூர்த்தம்மார்ச் 15, 2022 12:21 AM

First published:

Tags: Hindu Temple