Home /News /spiritual /

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்திய பெற்றோர்கள்...

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்திய பெற்றோர்கள்...

தூக்க நேர்ச்சை சடங்கு

தூக்க நேர்ச்சை சடங்கு

Kanniyakumari District | குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தை வரம் கேட்டு அம்மனுக்கு வேண்டுதல் வைத்து, குழந்தை கிடைத்ததும் வித்தியாசமான வழிபாட்டு முறையால் பச்சிளம் குழந்தைகளுடன் நேர்த்தி கடன் செலுத்திய பெற்றோர்கள்...

மேலும் படிக்கவும் ...
கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது. மீனபரணி திருவிழா அதாவது மாசி மாசம் நடைபெறுகிறது. இந்த தூக்கத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. நூற்றாண்டு காலமாக மக்கள் நம்பிக்கை அடிப்படையில் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை வரம் கோரியும், குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழவும் வேண்டுதல் வைத்து இந்த கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் சன்னிதியில் அம்மனை நாடி வருவார்கள்.

அம்மனுக்கு பிரசாதமாக அர்ப்பணிக்கும் ஒரு நிகழ்வாக அம்மனை ஐம்பதடிக்கும் மேல் உயரமான தூக்க வில்லு என்று அழைக்கப்படும்  தேரில் கோயிலை சுற்றி ஒரு முறை வலம் வருவது குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதிகளின் நேர்த்திக்கடன் ஆகும்.  இதற்கு பிறந்து ஒரு வயதுக்குட்பட்ட அசைவம் சாப்பிடாத குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் குழந்தைகளை இந்த தூக்க நேர்ச்சையில் தேரில் தூக்கி செல்பவரும் பல்வேறு வேண்டுதலுக்காக குழந்தைகளை தேர் அல்லது தூக்க வில்லில் குழந்தைகளை பாதுகாப்பாக தங்களது கைக்குள் தேரில் தொங்கிய வண்ணம் கோவிலை ஐம்பது அடிக்கும் மேல் உயரத்தில் உள்ள வில்லில் சுற்றி வர வேண்டும்.

இந்த நேர்த்தி கடன் செலுத்தும் பெற்றோர்கள் ஏழு நாட்கள் விருதம் இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளை தேரில் ஏற்றி செல்லும் தூக்க காரன் ஒரு வாரம் கோயிலில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விருதம் இருப்பதோடு யோகா போன்ற பயிற்ச்சியும் அம்மன் சன்னிதியில் ஏழு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும்.

கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்திய பெற்றோர்கள்


ஒரு குழந்தைக்கு ஒருவர் மட்டுமே தூக்ககாரனாக இருக்க முடியும். அப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருத்தர் தூக்க நேர்ச்சையில் பங்கேற்க முடியும். குழந்தைகளை தூக்கி வலம் வரும் ஒவ்வொரு நபரும் தங்களது குடும்பம் வாழ்க்கை நலனுக்காகவே இந்த குழந்தைகளை சுமந்து தேரில் வலம் வரும் நேர்ச்சையில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வாண்டு மீனபரணி திருவிழா கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கப்பட்டு, இந்த வருட தூக்க நேர்ச்சை இன்று காலை துவங்கி முதலில் அம்மன் தூக்கமும் தொடர்ந்து 1098 குழந்தைகள் தூக்கமும் நடைபெறுகிறது.

மேலும் படிக்க... மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது..

இந்த தூக்க நேர்ச்சை வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று உள்ளனர். இன்று காலையில் துவங்கிய இந்த தூக்கம் நாளை அதிகாலை வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Kanniyakumari

அடுத்த செய்தி