ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கந்தசஷ்டி திருவிழா : திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட கோயில் நிர்வாகங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

கந்தசஷ்டி திருவிழா : திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட கோயில் நிர்வாகங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 12 நாட்களுக்கு நடக்கும் திருவிழாவில் 20ம் தேதி சூரசம்ஹாரமும், 21-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவிருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகமெங்கும் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் இல்லாமல் கந்த சஷ்டியை கொண்டாட கோயில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

  திருச்செந்தூர் முருகன் கோயிலில் 12 நாட்களுக்கு நடக்கும் திருவிழாவில் 20ம் தேதி சூரசம்ஹாரமும், 21-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவிருக்கிறது. இவ்விரண்டு நிகழ்வுகளிலும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் வளாகம், மண்டபம், விடுதிகளில் தங்குவும், அங்கு விரதம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக கோயில் பிரகாரத்திலேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கப்பட்டது.

  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலிலும் கந்தசஷ்டி இலட்சார்ச்சனை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில் வளாகத்துக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நின்று வழிபட்டனர்.

  திருத்தணி முருகன் கோயிலில் தங்க கவசம், வைரக்கல், பச்சை கல் மரகத முத்துமாலை என சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கோவிலுக்கு வந்து வணங்கி செல்கின்றனர்.

  தென்காசி மாவட்டம், ஆயக்குடி முருகன் கோவிலிலும் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் குறைவான அளவிலேயே பக்தர்கள் பங்கேற்றனர். இந்த கோயிலில் வீதி உலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கோயில் வளாகத்திலேயே கந்த சஷ்டி நடைபெற உள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Murugan temple