• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • அத்திவரதர் தரிசன நேரம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு!

அத்திவரதர் தரிசன நேரம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு!

அத்தி வரதர்

அத்தி வரதர்

காலை 5 மணி முதல் இரவு 8 வரை என்றிருந்த தரிசன நேரம், காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையன் அறிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனத்துக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் பூஜை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. வசந்த மண்டபத்தில் சயனகோலத்தில் காட்சி அளிக்கும் அத்திவரதரை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து அத்திவரதருக்கு பூஜைகள் செய்ய தங்கள் குடும்பத்தினருக்கு இந்து அறநிலையத்துறை அனுமதி மறுத்து வருவதாக கூறி சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில் 1000 ஆண்டுகளாக வரதராஜர் கோவிலை நிர்வகித்தும், பல்வேறு படையெடுப்புகளில் இருந்து பாதுகாத்தும் வந்த தாதாச்சாரியார் குடும்பத்தினர், கோவில் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அத்திவரதர் நிகழ்ச்சிக்கான அறக்கட்டளையில் தங்களது குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும், அத்திவரதருக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தாதாச்சாரியார் குடும்பத்தினர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அத்திவரதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், பூஜைகள் தொடர்பாக விரிவான அறிக்கையை இந்து சமய அறநிலைய துறை நாளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

முன்னதாக, அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான நேரம் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா, காலை 5 மணி முதல் இரவு 8 வரை என்றிருந்த தரிசன நேரம், காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவ நிகழ்ச்சிகளை முன்னிட்டு தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 4-வது நாளாக அத்திவரதரை ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.





மேலும் படிக்க... 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாகத் தொடங்கிய அத்தி வரதர் திருவிழா




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: