இன்று அத்திவரதரை தரிசிக்க குறைந்த பக்தர்கள் கூட்டம்!

கடந்த 46 நாட்களில் 1 கோடியே 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 16, 2019, 3:09 PM IST
இன்று அத்திவரதரை தரிசிக்க குறைந்த பக்தர்கள் கூட்டம்!
40-வது நாள் அத்திவரதர்
Web Desk | news18
Updated: August 16, 2019, 3:09 PM IST
அத்திவரதரை தரிசிக்க கடைசி நாளான இன்று அதிகாலை முதல் 8 மணி வரை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது நேற்றை விட குறைவாகவே பக்தர்கள் கூட்டம் உள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை முதல் தேதி தொடங்கியது. முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க இன்று தான் கடைசிநாள் என்பதால் மிக அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, நேற்றை விட குறைவாகவே பக்தர்கள் கூட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பக்தர்கள் கூட்டம் குறைந்தது


ஆனால் காலை கூட்டம் அதிகமாக இருந்தது. அதற்கு காரணம், இரவு தங்கி தரிசனம் செய்யும் பக்தர்கள் அதிகாலை வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது என்று கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கடந்த 46 நாட்களில் 1 கோடியே 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

மேலும் படிக்க...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...