• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • பக்தர்களுக்கு சயனக்கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர்!

பக்தர்களுக்கு சயனக்கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர்!

அத்திவரதர்

அத்திவரதர்

  • News18
  • Last Updated :
  • Share this:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருக்கும் அத்திவரதர் சிலையை, வெளியே எடுத்து மக்களின் தரிசனம் செய்யும் நிகழ்வு இன்று காலை தொடங்கியது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இந்தாண்டு அத்திவரதர் தரிசனம் இன்று காலை தொடங்கியது.

அதிகாலை 2.45 மணிக்கு அத்திவரதர் சிலை மைய மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. இதனை அடுத்து, பக்தர்கள் தரிசனம் தொடங்கியது.

காஞ்சிபுரம் அத்திவரதர் தண்ணீரில் மறைத்து வைக்கப்பட்டது ஏன்...? புராணம் கூறுவது என்ன...?

ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் பக்தர்கள் அணி திரண்டு வந்துள்ளனர்.



48 நாட்களில் 30 நாட்கள் அத்திவரதர் சயன நிலையிலும் 18 நாட்கள் நின்ற நிலையிலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்க இருக்கிறார்.

காலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். பக்தர்களுக்காக பல ஏற்பாடுகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அத்திவரதரை தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: