காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 16 அன்றே நிறைவு!

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 16 அன்றே நிறைவு!
அத்திவரதர்
  • News18
  • Last Updated: August 8, 2019, 5:27 PM IST
  • Share this:
அத்திவரதர் தரிசனம் வரும் 16-ம் தேதியுடன் நிறைவுபெறும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை  1- ம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆகஸ்ட் 17-ம் தேதி காலை முதல் அத்திவரதரை அமிர்த சரஸ் குளத்திற்குள் இறக்குவதற்கான பணிகள் நடைபெற உள்ளதால் 16-ம் தேதியே தரிசனம் நிறுத்தப்படும் என என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 15-ம் தேதி மாலை 5 மணியுடன் விஐபி தரிசனம் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் காஞ்சிபுரத்தில் கூடுதலாக 25 மினி பேருந்துகள் உட்பட 70 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் 35,000 பேர் தங்குவதற்கு வசதியாக 3 தற்காலி கூடங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


தற்காலிக கூடங்களில் பக்தர்களை தங்க வைத்து அங்கிருந்து கோவிலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு  கழிவறை, உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள் கிடைக்க அனைத்து ஏற்படுகளும் செய்யப்படுள்ளதாகவும் ஆட்சியர் பொன்னையன் தெரிவித்தார்.

மேலும் முதல்வர் அறிவுரைப்படி காவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க... நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதர்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்