அத்திவரதர் : கொட்டும் மழையில் நனைந்தபடி வரிசையில் காத்திருந்து தரிசனம்

இன்று கடைசி சனிக்கிழமை என்பதால், 4 கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் 6 மணி நேரம் வரை காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

Web Desk | news18-tamil
Updated: August 10, 2019, 10:38 PM IST
அத்திவரதர் : கொட்டும் மழையில் நனைந்தபடி வரிசையில் காத்திருந்து தரிசனம்
மழையில் நனைந்தபடி வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
Web Desk | news18-tamil
Updated: August 10, 2019, 10:38 PM IST
விடுமுறை நாள் என்பதால், அத்திவரதரை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், கொட்டும் மழையில் நனைந்தபடி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவத்தின் 41-வது நாளான இன்று, ரோஸ் மற்றும் ஊதா நிற வெண்பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த நிலையில், அத்திவரதரை தரிசிக்க இன்று கடைசி சனிக்கிழமை என்பதால், 4 கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் 6 மணி நேரம் வரை காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.


அனைத்து திசையிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் காஞ்சிபுரம் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் சுமார் 15 நிமிடத்திற்கும் மேலாக மழை கொட்டிய போதும், அதை பொருட்படுத்தாத பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

5 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அத்திவரதரை 77 லட்சம் மக்கள் வழிபட்டுள்ள நிலையில், பக்தர்கள் 5 கோடியே 44 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...