முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தீராத கடனும் தீர காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றி வழிபாடு செய்யுங்கள்...

தீராத கடனும் தீர காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றி வழிபாடு செய்யுங்கள்...

காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு

காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு

மகிமை பொருந்திய காமாக்ஷி விளக்கு வீட்டில் மங்கலத்தை உண்டாக்கி பிரச்சனைகளை தீர்க்கும்... குறிப்பாக கடன் பிரச்னைகளை தீர்க்கும்என்ற நம்பிக்கை உள்ளது...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரச்சனை தீராமல் அவதிப்படுபவர்களுக்கு ஆன்மீக ரீதியாக சக்திவாய்ந்த ஒரு வழிபாடு முறை உள்ளது. இந்த வழிபாடு பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்தால் உங்களுடைய வேண்டுதல் உடனே நிறைவேறும். குறிப்பாக கடன் சுமை உள்ளவர்கள் கடன் தீர வேண்டும் என்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். 

காமாட்சி அம்மன் விளக்கு

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையானது காமாட்சி அம்மன் விளக்கு. காமாட்சி அம்மன் அமர்ந்திருப்பது படி, இரண்டு பக்கமும் கரும்பு இருக்கும் விளக்குதான் காமாட்சி அம்மன் விளக்கு. இதை தவிர கஜலட்சுமி விளக்கு, அஷ்ட லட்சுமி விளக்கு உங்கள் வீட்டில் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்வதற்காக புதியதாக காமாட்சி அம்மன் விளக்கை ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இது வெள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என்று அல்ல. பித்தளையில் கூட இருக்கலாம்.

விளக்கு ஏற்றும் முறையும் வழிபாடும்

இந்த விளக்கை தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு,  அரிசி மாவில் கோலம் ஒன்று போட்டு கொள்ள வேண்டும். அதன்பின்னர் அந்த  கோலத்தின் மேலே ஒரு சிறிய தட்டை வைத்து அந்தத் தட்டில் கொஞ்சமாக பச்சரிசி கொட்டி அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும். அந்த காமாட்சி அம்மன் விளக்கில் நெய் ஊற்றி, தாமரைத் தண்டு திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். இந்த விலக்கிற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து உங்களுடைய கடன் சுமை குறைய வேண்டும்.

கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று குல தெய்வத்தையும் காமாட்சி அம்மனையும் மனதார 10 நிமிடங்கள் வேண்டிக்கொண்டு பிராத்தனை செய்ய வேண்டும். அதன் பின்பு விளக்கை கையெடுத்து  வணங்கி விட்டு ஊதுவத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

காமாட்சி அம்மனின் வரலாறு

உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர் காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க... விளக்கு ஏற்றுவதில் கூட இத்தனை விஷயங்கள் இருக்கா?

மேலும் இந்த பூஜையை சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது காலை 6 மணிக்கு முன்பு உங்களுடைய வீட்டில் நிறைவு செய்திருக்க வேண்டும். கடன் பிரச்சனை என்று மட்டுமல்ல, எதை நினைத்து உங்களுடைய வீட்டில் நீங்கள் இந்த பூஜையை தொடங்கினீர்களோ, அந்த வேண்டுதல் 48 நாட்களுக்குள் நிச்சயமாக நிறைவேறி இருக்கும்.

முழு நம்பிக்கையோடு இந்தப் பூஜையை உங்களுடைய வீட்டில் தொடங்கவேண்டும். நீங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் முழுமூச்சோடு நீங்கள் ஈடுபட வேண்டும். விடாமுயற்சியும் இந்த ஆன்மீக ரீதியான பூஜையும் ஒன்று சேரும் போது உங்களுடைய பலம் அதிகரிக்கும். நீங்கள் நினைத்தது நிச்சயம் பலிக்கும். குறிப்பாக கடனை அடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் சரி, பல வருடங்களாக வட்டி கட்ட முடியாமல் திணறி வருபவர்கள் இந்த பூஜையை செய்தால் கூடிய சீக்கிரத்திலேயே அவர்களுக்கு அந்த கடன் பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும்.

காமாட்சி விளக்கை அனுதினமும் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

1. வீட்டில் அனைத்து விதத்திலும் மங்களம் உண்டாகும். குலம் தழைக்கும்.

2. கிரக தோஷங்கள் தீரும்.

3. செல்வம் செழித்து... வறுமை நீங்கும்.

4. வழக்குகள் வெற்றி அடையும்.

5. நேர்முக - மறைமுக எதிர்ப்புகள் கூட விலகும்.

மேலும் படிக்க...ஆடி மாதத்தில் காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றி வைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?... 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க

First published:

Tags: Temple