கால்சர்ப்ப தோஷம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளால் ஏற்படும் தீவிரமான தோஷத்தைக் குறிக்கிறது. ஜனன கால ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையைப் பொருத்து தோஷங்கள் மற்றும் யோகங்கள் உருவாகிறது. இந்த தோஷம் ஜாதகரின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கிறது, குறிப்பாக, திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும்.
கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
உங்கள் ஜாதகத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்கள் இடையே மீதம் உள்ள கிரகங்கள் அமைந்திருக்கும் இடங்களை பொறுத்து கால சர்ப்ப தோஷம் உருவாகிறது.
ஒரு ஜாதகத்தில் மொத்தம் 12 ராசிகள் மற்றும் ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. ராகு கேது தவிர்த்து மீதம் ஏழு பக்கங்கள் உள்ளன. இதில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு கிரகங்களும், உங்கள் ஜாதகத்தில் ராகு மற்றும் கேது ஆகியவற்றுக்கு இடையே அமர்ந்திருந்தால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படுகிறது.
ராகு மற்றும் கேது இரண்டுமே நேரெதிராக அமர்ந்திருக்கும். அதாவது முதல் வீட்டில் ராகு இருந்தால் ஏழாவது வீட்டில் கேது இருக்கும். மூன்றாவது வீட்டில் ராகு இருந்தால் ஒன்பதாவது வீட்டில் கேது இருக்கும். இந்த இரண்டு கிரகங்களுக்கும் இடையில் ஏனைய ஏழு கிரகங்களும் அமைந்திருந்தால் அது கால சர்ப்ப தோஷமாகும். அதாவது பாம்பின் வாய் மற்றும் வாளுக்கு இடையே சிக்கியிருக்கிறது சிக்கி இருப்பது போன்ற ஒரு நிலையைக் குறிக்கும்.
கால சர்ப்ப தோஷம் மற்றும் திருமணம்
இத்தகைய தோஷம் உள்ள ஜாதகத்தில், அனைத்து கிரகங்களும் ஒரே பக்கம் அமைந்திருக்கும். முதல் கிரகம் ராகுவாகவும், கடைசியாக கேதுவாகவும் இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களை குறிக்கும் அனைத்து கிரகங்களுமே பாம்பின் தலை மட்டும் பாம்பின் வாலுக்குள் அடங்கி இருப்பது, அதாவது பாம்பின் பிடிக்குள் இருக்கிறது என்பதை குறிப்பது தான் கால சர்ப்ப தோஷம்.
பொதுவாகவே கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு எல்லாவிதங்களிலும் ஏதேனும் தடையோ அல்லது முயற்சிகள் கைகூடாமல் போவது போன்ற எதிர்மறையான சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும். கால சர்ப்ப தோஷம் இருக்கும் ஜாதகருக்கு இளம் வயதில் திருமணம் நடப்பது கடினம்தான். மற்ற கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்று வலுவாக இருந்தாலும் திருமணத்தில் காலசர்ப்ப தோஷம் இருந்தால் தடைகள் ஏற்படும்.
கால சர்ப்ப தோஷம் உள்ள ஒருவர் வாழ்க்கையில் திருமண தாமதம், பதற்றம், மனச்சோர்வு, பயம் மற்றும் பாதுகாப்பின்மை, நாள்பட்ட உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படுதல், தொழில் அல்லது வேலை இழப்பு, தொழில் தோல்வி, சொத்து இழப்பு, சட்டச் சிக்கல்கள் போன்ற பல சிரமங்களையும் உண்டாக்கும்.
Also see... கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் பரிகாரங்களும்..
நீங்கள் கால சர்பத்தால் பாதிகப்பட்டுள்ளீர்கள் என்பதை பின்வரும் சூழல்கள் மூலம் உறுதி செய்யலாம்
Also see... கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபடுவது எப்படி?
பொதுவாக கால சர்ப்ப தோஷம் அல்லது திருமணம் சம்பந்தப்பட்ட தோஷம் இருப்பவர்களுக்கு திருமணம் 30 வயதுக்கு மேல்தான் அமையும். தீவிரமான தோஷம் இருப்பவர்களுக்கு 33 வயதுக்கு பிறகு தான் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் தோஷத்தின் தீவிரத் தன்மையை குறைக்க மற்றும் திருமண தடைகள் நீங்க பின்வரும் பரிகாரங்களை செய்யலாம்.
கால சர்ப்ப தோஷம் இருக்கும் அனைத்து ஜாதகர்களும், காளஹஸ்தி கோவில் சென்று கோவிலில் குறிப்பிட்ட வழிமுறைகளின்படி தோஷ நிவர்த்தி பூஜையில் கலந்து கொண்டால் திருமண தடை நீங்கி உடனடியாக திருமணம் நடக்கும்.
கால சர்ப்ப தோஷத்தின் எதிர்மறை விளைவுகள் குறையவும், முழுவதுமாக நீங்கவும் காலத்திற்கு அதிபதியான ஈஸ்வரனை தொடர்ந்து வணங்கி வருவது சிறந்த பரிகாரம் ஆகும்.
மேலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது, ஒவ்வொரு திங்கட்கிழமையன்று சிவன் ஆலயம் சென்று தரிசனம் செய்வது, வில்வ இலைகளால் மாலை சாற்றுவது ஆகியவை கால சர்ப்ப தோஷத்தின் தீவிரத் தன்மையை குறைத்து திருமண தடையை நீக்கும்.
Also see... 2022ஆம் ஆண்டில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு காலசர்ப்ப தோஷம் என்ன செய்ய போகிறது தெரியுமா?
திருமணத்தில் தடைகள் அல்லது ஜாதகம் பொருந்தியும் திருமணம் தாமதம் ஆவதைத் தடுக்க, ஆஞ்சநேயருக்கு 13 வாரங்களுக்கு, வெற்றிலை மாலை சாற்றுவது மற்றும் வெண்ணைக் காப்பு சாற்றுவது ஆகியவை பலன் அளிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhosham | தோஷம், Pariharam | பரிகாரம், Rahu Ketu Peyarchi, Snake