ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் பரிகாரங்களும்..

கால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் பரிகாரங்களும்..

சிலரது கனவில் பாம்பு அடிக்கடி வரும். சிலரது கண்களில் பாம்பு அடிக்கடி தென்படும். கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோக ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு பாம்பு கனவுகள் வரலாம். பாம்பு தென்படலாம்.

சிலரது கனவில் பாம்பு அடிக்கடி வரும். சிலரது கண்களில் பாம்பு அடிக்கடி தென்படும். கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோக ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு பாம்பு கனவுகள் வரலாம். பாம்பு தென்படலாம்.

சிலரது கனவில் பாம்பு அடிக்கடி வரும். சிலரது கண்களில் பாம்பு அடிக்கடி தென்படும். கால சர்ப்ப தோஷம் அல்லது கால சர்ப்ப யோக ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு பாம்பு கனவுகள் வரலாம். பாம்பு தென்படலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் தடைகள் என அனைத்திலும் தடைகள் ஏற்படுத்தும்.

இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது அவற்றைக் கொல்ல முயலும்போது ஒன்றை மட்டும் கொன்றால்அது மிகக்கொடூரமான பாவமாகும். இந்தப்பாவம் செய்தவர்கள்தான் மறுபிறவியில் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர். அப்படி அடிக்கும்போது அது உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்பதைப்போல தனது வாலால் மூன்றுமுறை தரையில் அடித்துச் சத்தியம் செய்யும். அப்போது அதை உயிரோடு விட்டுவிட்டால் நீங்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து தப்பித்தீர்கள். இல்லாவிட்டால், அது உங்களின் அடிதாங்காமல் உயிர்விட்டால், சாபம் ஈந்துவிட்டு இறக்கும்.

காலனான ராகுவுக்கும், சர்ப்பமான கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும். கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும். இது ஜாதகத்தில் உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்று ஐதீகம்.

ராகு, கேது இருவரும் விஷம் உள்ள பாம்புகள். இவர்களுக்கு இடையே சிக்கி முன்னும் பின்னும் இவர்களின் விஷத்தால் தாக்கப்படுவதால் கிரகங்கள் செயல் இழக்கின்றன என்பது கருத்து.

ராகுவிற்கு பாம்பின் உடல் குணத்தால் வாலில் விஷம், கேதுவிற்கு பாம்பின் தலையானதால் தலையில் விஷம். இந்த அடிப்படையில் கால சர்ப்ப தோஷம் அமைகிறது. சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும்.

பரிகாரங்கள் :

ராகுகாலங்களில் அம்பாள் சன்னதியில் எல்லாநாளும் வரும் ராகுகாலத்தில் எலுமிச்சையில் தாமரை நுாலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும். கால பைரவரை வழிபட்டால் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.

சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும். அல்லது ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷத்தினால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க... ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் தெரியுமா?

தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோயிகள்

திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும். எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.

ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும. ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.

மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: குரு பகவான் கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் யார் தெரியுமா?

First published:

Tags: Dhosham | தோஷம், Pariharam | பரிகாரம், Rahu Ketu Peyarchi