முகப்பு /செய்தி /ஆன்மிகம் / கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபடுவது எப்படி?

கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபடுவது எப்படி?

ராகு கேது

ராகு கேது

Kaala Sarpa Dosham | சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும் |

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

 ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே கால சர்ப்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும். ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.

தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோயில்கள்

திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும். எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.

தோஷத்திலிருந்து விடுபடுவது எப்படி?

ராகுகாலங்களில் அம்பாள் சன்னதியில் எல்லா நாளும் வரும் ராகுகாலத்தில் எலுமிச்சையில் தாமரை நுாலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும். கால பைரவரை வழிபட்டால் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும். அல்லது ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷத்தினால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.

செவ்வாய்கிழமை பாம்புகளுக்கு பால் வார்ப்பது நல்லது.  துர்க்கை மற்றும் விநாயகப் பெருமானை வழிபட்டால் தோஷங்கள் விலகும்.. செவ்வாய் கிழமைகளில் ராகு மற்றும் கேதுவிற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த பரிகாரங்கள் பொதுவான ஜாதக பரிகாரமாகும்.

மேலும் படிக்க... பாவங்களில் இருந்து விமோசனம் தரும் ஏகாதசி விரதம் - பாப மோசனி விரதத்தின் கதை, தேதி மற்றும் நேரம்

பரிகாரங்கள் :

ராகு காலங்களில் அம்பாள் சன்னதியில் எல்லாநாளும் வரும் ராகுகாலத்தில் எலுமிச்சையில் தாமரை நுாலில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் விலகும். கால பைரவரை வழிபட்டால் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.

சூரியகிரகணமும், சந்திர கிரகணமும் வரும் நாட்களில் திருக்காளஹஸ்தி கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நன்மை கிடைக்கும். அல்லது ஏழை எளியோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்தால் தோஷத்தினால் ஏற்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.

First published:

Tags: Rahu Ketu Peyarchi