நவகிரகங்களில் முக்கியமான கிரகமாக குருவும் விளங்குகிறது. சுபக்கிரகமாக கருதப்படும் குருபகவான் தெய்வீகத்திற்கும், வேதாந்த ஞானத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறார். பொன்னிற மேனியான அவர் மஞ்சள் வஸ்திரத்தை அணிந்து கொண்டு வெள்ளை யானை வாகனத்தில் விண்ணில் வலம் வருகிறார்.
குரு பகவான் தனது பயணத்தில் ஒரு ராசி மண்டலத்தை கடக்க சுமார் ஓராண்டு ஆகும். அதன்படி 12 ராசிகளையும் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். குரு பகவான் பெரும்பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகளை செய்யவே விரும்புவார். அப்படியே அவர் கெடுபலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் அந்த கெடுபலன் நமக்கு ஒரு படிப்பினையை உணர்த்துவதாகவே இருக்கும். அதாவது ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றதாகவே அமையும்.
குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு 15-11-2020 அன்று (ஞயிற்று கிழமை) இரவு 11-48 மணிக்கு மகர ராசிக்கு மாறியுள்ளார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, 2020 நவம்பர் 20 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
மகர ராசியில் இருக்கும் குருபகாவன் 4-4-2021 அன்று அதிசாரம் பெற்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவர் 14-9-2021 அன்று அதிசாரம் முடிந்து மகர ராசிக்கு மாறுகிறார். அங்கு அவர் 13-11-2021 வரை இருப்பார். அதன்பிறகு கும்ப ராசிக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. கோச்சார அடிப்படையில் பலன் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து பலனை பார்க்கக்கூடாது. அதன்படி முக்கிய கிரகங்களான சனி, ராகு , கேது ஆகியவையின் இருப்பிடத்தைக்கொண்டும் ஆராய்ந்து இங்கே பலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது தனுசு ராசியில் இருக்கும் சனிபகவான் (2020) டிசம்பர் மாதம் 26-ந் தேதி சனிகிழமை இரவு 4-50 மணிக்கு (ஞயிற்றுகிழமை அதிகாலை) மகர ராசிக்கு மாறுகிறார். மகர ராசியில் இருக்கும் சனிபகவான் 12-5-2021 அன்று வக்கிரம் அடையத் தொடங்குவார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
26-9-2021 வக்கிர நிவர்த்தி அடைகிறார். தற்போது ராகு ரிஷப ராசியில் இருக்கிறார். கேது விருச்சிக ராசியில் இருக்கிறார். அவர்கள் அங்கு 21-3-2022 வரை இருப்பார்கள். மேலும் வாசகர்கள் இன்னொரு அம்சத்தை கவனிக்க வேண்டும். இங்கே தொகுத்து தரப்பட்டிருப்பது கோச்சார பலன்களே. இதில் சிலருக்கு சுமாரான பலன்களே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தால்கூட அவர்கள் ஜாதகத்தில் நல்ல திசை, புத்தி நடந்தால் நன்மையே நடக்கும்.
இங்கே ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களால் இயன்ற பரிகாரத்தை செய்தால்போதும். பணத்தைக் கொட்டித்தான் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது இல்லை. பரிகாரம் செய்வதால் கெடுபலன்கள் குறைந்து நன்மை அதிகரிக்கும். மனதில் நிரந்தர மகிழ்ச்சி நிலவும்.
மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
ரிஷபம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
மிதுனம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
கடகம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
சிம்மம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
கன்னி - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
துலாம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
விருச்சகம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
தனுசு - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
மீனம் - குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
12 ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் ஜோதிடர் காழியூர் நாராயணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi, Rasi Palan