திருத்தணி முருகன் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு...
திருத்தணி முருகன் கோயிலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு...
திருத்தணி முருகன் கோயிலில் ஜப்பானிய பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
Thiruttani Murugan temple | ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு தமிழ் மொழியின் சிறப்புகள் கூறி பெருமிதம்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் திருத்தணி முருகப்பெருமானை தரிசித்து தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து மலைக்கோவில் மாட வீதிகள் வழியாக உலாவந்து முருகப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர்.
முருகன் தரிசனம் குறித்து முருகப்பெருமான் மீதும் தமிழ் மொழி மீதும் ஆர்வம் கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி என்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த 30 ஆண்டுகளாக அந்நாட்டு மக்களுக்கு தமிழ்மொழி பயிற்சியும் இந்து ஆன்மீகத்தின் மீது மிகுந்த பக்தியும் குறிப்பாக முருகப்பெருமான் மீது அபார நம்பிக்கை ஏற்ப்படுத்தி வருகிறார்.
அவரது குழுவினர் ஆன்மீக தேடல் என்ற பெயரில் தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் தரிசனம் செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக ஐந்தாம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தங்க தேர் இழுக்க முன்பதிவு செய்து கொண்டு நேற்று மாலை அவர்கள் சார்பில் முருகப்பெருமானின் தங்கத்தேர் இழுத்து கோவில் மாட வீதிகளில் பவனி வந்து காட்சி தந்தார்.
இதில் ஜப்பானியர்கள் விரதமிருந்து முருகன் மாலை அணிந்து கொண்டு வந்து தேரை வடம் பிடித்து இழுத்து முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆன்மீகத்தின் மீது முருகப்பெருமான் மீதும் தமிழ் மொழி மீதும் கொண்ட ஆர்வம் நம் தமிழக பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.