• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • கோகுலாஷ்டமி நாளில் விரதம் இருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற சாப்பிட வேண்டிய உணவுகள்..!

கோகுலாஷ்டமி நாளில் விரதம் இருப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெற சாப்பிட வேண்டிய உணவுகள்..!

விரதம் இருப்பவர்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களும் உள்ளன.

  • Share this:
நாடு முழுவதும் கோகுலாஷ்டமி பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விஷேச நாளில் நாட்டின் பல பகுதிகளிலும் கோவில்களிலும் கீர்த்தனைகளும், பஜனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு கிருஷ்ண வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன. கிருஷ்ணர் ஆலயங்களில் இன்று கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலச நீரால் கிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்படும். இசைக்கருவிகளை முழங்கி எங்கும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற கோஷங்கள் ஒலித்து வருகின்றன.

ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கிருஷ்ணலீலை நாடகங்கள் மற்றும் மோகினி ஆட்டம் இன்று நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் பல வீடுகளில் கிருஷ்ணர் சிலையை வைத்து அவருக்கு அலங்காரமிட்டு, பலவிதமான பலகாரங்களை செய்து வைத்து வழிபடுவர். அதேபோல இந்த நாளில் குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் காலடி எடுத்துவைப்பார் என்பதும் ஐதீகம். எனவே வாசற்படியில் இருந்து வீட்டிற்குள்ளே கிருஷ்ணர் நுழைவது போல குழந்தை பாதத்தை அரிசி மாவு கரைசலில் கோலமிடுவர். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்களுக்கு கிருஷ்ண அலங்காரமிட்டு அவர்களின் பாதங்களை அரிசி மாவில் முக்கி வீட்டிற்குள் காலடி தடங்களை பதிப்பர்.

பல்வேறு மாநிலங்களில் இன்றைய தினத்தில் உறியடி கொண்டாட்டங்கள் கூட நடத்தப்படும். அதேபோல பகல் முழுவதும் பகவான் கிருஷ்ணரை வழிபட்டு, அவர் பிறந்த நேரம் நள்ளிரவு என்பதால் அப்போது வரை மக்கள் விரதம் இருந்து தங்கள் வழிபாட்டை நடத்துவர். தற்போதைய கொரோனா நெருக்கடியில், வழிபாடுகள் அனைத்தும் மிக கவனமாக நடத்தப்பட்டு வரும் அதேவேளையில், உண்ணாவிரதம் இருப்பவர்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களும் உள்ளன. அதன்படி உண்ணாவிரதம் இருக்கும்போது நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி பின்வருமாறு காண்போம்.

கோகுலாஷ்டமி தினத்தில் விரதம் இருக்கும்போது என்ன சாப்பிட வேண்டும்

முதலில், விரதம் என்பது எதையுமே சாப்பிடக்கூடாது என்று அர்த்தமல்ல. விரதம் இருக்கும் நாளில் ஒருவேளை அல்லது இருவேளை உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறோம். அதேசமயம் விரதம் இருக்கும் போது உங்கள் உடலில் ஆற்றல் குறையாமல் இருக்க சில பழவகைகள் அல்லது சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்வது அவசியம். எனவே இன்றைய உண்ணாவிரத நாளில், உலர் பழங்களைச் சாப்பிட்டு உங்களின் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் வாழ்த்து அட்டைகள்!

ஏனெனில் கொரோனா தொற்றுநோய் காலங்களில் ஒருவரின் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. பாதாம் அல்லது வால்நட் உடன் உங்கள் விரதத்தைத் ஆரம்பிக்கலாம். இதன் மூலம் நாள் முழுவதும் உங்களுக்கான ஆற்றல் கிடைக்கும். உங்கள் ஆற்றல் நிலைகளையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பராமரிக்க, கருப்பட்டி, தர்பூசணி மற்றும் திராட்சை போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் சாப்பிடலாம். மேலும், நீங்கள் அதிகம் சாப்பிடாமல் இருக்கவும் உங்கள் வயிற்றை காலியாக வைக்காமல் இருக்கவும் வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் கொய்யா போன்ற பருவகால பழங்களை நீங்கள் சாப்பிடலாம்.

மேலும் படிக்க... Krishna Janmashtami 2021: கிருஷ்ண ஜெயந்தி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...

நீங்கள் தயிர் லஸ்ஸி கூட சாப்பிடலாம். இது தாகம் எடுப்பதைத் தடுக்கிறது. இது உங்களை முழுமையாக உணர உதவுகிறது. ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஜவ்வரிசி மற்றும் பப்பரை பயிர் போன்றவற்றை கூட இந்த நாளில் சமைத்து சாப்பிடலாம். இது உங்கள் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.

கோகுலாஷ்டமி தினத்தில் விரதம் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்:

இன்றைய தினத்தில் நாள் முழுவதும் விரதம் இருப்பவர்கள், கிருஷ்ணருக்கு பூஜை முடிந்தவுடன் பக்கோடா, சிப்ஸ், பாப்பாட், வடை மற்றும் எண்ணெய் பலகாரங்களை உட்கொள்கிறார்கள். இதுபோன்ற அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய உணவுப் பொருட்களை விரதம் இருக்கும் ஒருவர் தவிர்க்க வேண்டும்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: