ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று உணவு தானம் அளிப்பது நல்லது... (மே 23, 2022)

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று உணவு தானம் அளிப்பது நல்லது... (மே 23, 2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | மே 23 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் இதோ

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் இதுவரை தனிமையில் இருப்பதாக உணர்ந்து இருந்தால், இனி அந்த நிலை மாறி விடும். இன்று எல்லாருடைய கவனமும் உங்கள் மீது தான் இருக்கும். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். வேலையில் அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெறுவீர்கள். அது மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் அதிர்ஷ்டமாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 5

தானம் - கோவிலில் மஞ்சள் நிற பழங்களை தானம் செய்யவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எண்களின் கூட்டு உங்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். உங்கள் தேவைகள் மற்றும் கனவுகள் என அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்வதற்கான நாள் இது. பெண்கள், தங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிப்படுத்தி, அலுவலகம் மற்றும் வீட்டில் அனைவரின் மனங்களையும் வெல்ல முடியும். குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த திறமையைக் கண்டு பெற்றோர் பெருமை அடைவார்கள். தம்பதிகளுக்குள் காதலும் நெருக்கமும் அதிகரிக்கும். முக்கியமான சந்திப்புகளுக்கு அல்லது நேர்காணல்களுக்கு கடல் பச்சை நிறத்தில் ஆடை அணிவது சாதகமாக இருக்கும். மீடியா துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள், டிசைனர், மருத்துவர்கள் மற்றும் நடிகர்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6

தானம் - ஏழைகளுக்கு சர்க்கரையை தானமாக வழங்கவும்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகள் அல்லது மாற்றத்தை நீங்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் மாற்றத்துடன் உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. உங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தவில்லை என்றால் உங்கள் உறவில் பிரச்சினை உண்டாகும், எனவே அமைதியாக இருக்கக் கூடாது. கிரியேட்டிவான நபர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். புதிய வணிகத்தைத் தொடங்குவதாக நீங்கள் யோசித்தால் அது வெற்றிகரமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - ஆசிரமங்களில் பிரவுன் சர்க்கரையை தானமாக வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டாம். இந்த நாள் மிகவும் சுமூகமாக செல்லும். அதுமட்டுமன்றி நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பணிகள் இன்று நிறைவேறும். மார்க்கெட்டிங் உத்திகளை செயல்படுத்துங்கள், அதிர்ஷ்டம் அதன் பங்குக்கு உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று உங்களுக்கு பிஸியான நாளாக இல்லாமல் இருந்தாலும் மாலை நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். உறவுகள், நட்பில் தவறான புரிதலை தவிர்ப்பதற்கு இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அசைவம் மற்றும் மதுபானத்தை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - ஏழைகளுக்கு ஆடைகளை தானம் செய்யவும்

#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அதிர்ஷ்ட சக்கரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. எனவே திடீர் அதிர்ஷ்டம் மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகிய இரண்டுமே உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உங்கள் நெருக்கமான உறவுகளுடன் ஜாலியாக இந்த நாளை கழிக்கலாம், ஷாப்பிங் செய்யலாம், பங்குகள் வாங்கலாம், மற்றும் விருப்பம் போல செயல்படலாம். ஒரு ஸ்பெஷல் நபரை இன்று நீங்கள் சந்திக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். நீங்கள் என விரும்புகிறீர்களோ அதை வாங்கலாம் அது உங்களுக்கு மிகச்சிறந்ததாக அமையும். அதேபோல பங்குச் சந்தை அல்லது சொத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - தாவரங்களை தானம் செய்யவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

புதிய வீடு, புதிய வேலை, புதிய உறவுகள், லாபம், வசதி வாய்ப்புகள், செழிப்பு, பயணம் இன்னும் வேற என்ன பாக்கி இருக்கிறது? வாழ்வில் அனைத்து வளம் மற்றும் வசதியுடன் வாழ்வதற்கான எல்லாமே உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய எல்லா டார்கெட்களையும் நீங்கள் இன்று நிறைவேற்றுவீர்கள் மற்றும் உங்களுக்கென்று ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கி அனைவரையும் வாய் பிளக்க செய்வீர்கள். வீட்டு தலைவிகளும், ஆசிரியர்களும் மிகப்பெரிய மரியாதையைப் பெறுவார்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது. கலைஞர்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்ப்பார்கள். திருமணம் செய்ய காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6 மற்றும் 2

தானம் - குழந்தைகளுக்கு நீல நிற பேனா, பென்சில் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஆவணங்கள் மற்றும் சட்ட அறிக்கைகள் ஆகியவற்றில் நீங்கள் இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் குருவின் பெயரை உச்சரித்து இன்றைய நாளை தொடங்குங்கள். முதியவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வணிக ஒப்பந்தங்களில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். இன்று நீங்கள் யாரையும் அத்தனை எளிதாக நம்ப வேண்டாம். மேலும் உங்களுடைய உணர்வுகளை கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இந்திய தினத்தை தொடங்குங்கள். மஞ்சள் நிற பருப்பு வகைகளை தானம் செய்தால் இன்று ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்கும்

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - செம்பு பாத்திரம் தானம் செய்யவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

யாருமே கச்சிதமானவர்கள் இல்லை, எனவே நீங்கள் மற்றவர்களை பற்றி முடிவு எடுப்பதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்து கடினமாக முயற்சி செய்தால் கடந்த கால கஷ்டத்தில் இருந்து நீங்கள் விடுபட்டு விடுவீர்கள். கால்நடைகளுக்கு இன்று நீங்கள் தானம் செய்வது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் ஏற்படும். மருத்துவர்கள், பொறியாளர்கள், பில்டர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் போன்றோருக்கு லாபம் கிடைக்கும். உலகங்களில் முதலீடு செய்வதற்கு இன்று ஏற்ற நாள். உடல் மற்றும் மனரீதியான ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தூங்குவதற்கு முன்பு யோகா செய்வது நல்லது

அதிர்ஷ்ட நிறம் – நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஆசிரமங்களில் கடுகு எண்ணெய் தானம் செய்யவும்.

#எண் 9 ( நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

தானம் என்பது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது எனவே நீங்கள் வெளியில் சென்று மற்றவர்களுக்கு உதவி செய்ய துவங்கும் முன்பு உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இளைஞர்களுக்கு தங்கள் இணையை ஈர்ப்பதற்கு இது சிறந்த நாளாக இருக்கிறது. நடிகர்கள், பாடகர்கள், டிசைனர்கள், அரசியல் தலைவர்கள் அல்லது மருத்துவர்கள், எழுத்தாளர்கள், மீடியா பணியாளர்கள் போன்ற பெரும் திரள் மக்களை மையமாக வைத்து தொழில் செய்பவர்களுக்கு பெயர், புகழ், வளம் ஆகிய அனைத்தும் ஒரே சமயத்தில் கிடைக்க இருக்கின்றன. பங்குச் சந்தைகள் மற்றும் நிலங்களில் முதலீடு செய்வதற்கு சரியான நாளாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பிரவுன்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6

தானம் - பெண் குழந்தைகளுக்கு சிவப்பு நிற கைக்குட்டையை தானமாக வழங்கவும்.

மே 23 அன்று பிறந்த பிரபலங்கள்: காயத்ரி தேவி, வினோத் ராய், சமீர் கோச்சார், ரஹ்மான், சுகந்தா மிஸ்ரா

First published:

Tags: Numerology