தமிழக கோவில்களை தணிக்கை செய்ய சத்குரு கோரிக்கை - நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

#கோவில்அடிமைநிறுத்து

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் வெளிப்புற தணிக்கை செய்ய வேண்டும் என்று சத்குரு சார்பில் கோரப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன், தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை ஒன்று விடுத்திருந்தார். அதில், இந்து சமய அறநிலையத் துறை , மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலின்படி, 11,999 கோவில்கள் ஒரு காலப் பூஜை செய்வதற்கு கூட வருவாய் இல்லாமல் தவிக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 44,121 கோவில்களில், முப்பத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில், பூஜைப் பணிகளையும் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள ஒரே ஒரு நபருக்கு மேல் நியமிக்க வருவாய் வரத்து இல்லை.

    34,093 கோவில்களில், பத்தாயிரத்துக்கும் கீழ் ஆண்டு வருவாய் உள்ளதால் அவை தத்தளித்துக் கொண்டிருக்கின்றன, இதன் விளைவாக அவை புறக்கணிக்கப்படுகின்றன.

    கோவில்கள் பக்தர்களின் பராமரிப்பின் கீழ் இருந்தால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், அவற்றை உயிரோட்டமாய், அதிர்வலையோடு வைத்திருப்பது மட்டுமல்லாமல், சுயசார்புடையதாகவும் அவர்கள் ஆக்கியிருப்பார்கள்.

    இந்த அவசர சமாச்சாரத்தில், இம்மாநிலத்தின் அரசியல் தலைவர்கள், தேவையான அவசிய சீர்த்திருத்தங்களையும், கொள்கை செயல் திட்டத்தையும் உருவாக்கி, பக்தர்களின் கைகளில் தமிழக கோவில்களின் நிர்வாகத்தை ஒப்படைத்து, தமிழ் சமூகத்தில் நற்பெயரும் நம்பிக்கையும் பெற்ற மக்களை கொண்ட கமிட்டியை வெளிப்படையாக அமைக்க ஆவண செய்திட வேண்டும் என்று தனது கோரிக்கையில் சத்குரு குறிப்பிட்டிருந்தார். தேர்தலின் போது, தங்களின் கட்சி தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கையை சேர்க்கும்படி கேட்டிருந்தார். ஆனால், எந்த பதிலும், அரசிடமிருந்தோ, கட்சிகளிடம் இருந்தோ வரவில்லை.

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை சத்குரு தொடர்ந்துள்ளார். அதில், கீழ்காணும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

    1) இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் வெளிப்புற தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரப்படுகிறது. கோவில்களின் கட்டிட அமைப்பையும் அதனுடன் தொடர்புடைய நிலப் புலங்கள் குறித்தும், கோவில்களின் அசையும் அசையா சொத்துக்கள் குறித்தும், அவை யார் வசம் உள்ளன, அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்தும், அவற்றிலிருந்து கிடைக்கும் வாடகை மற்றும் அவற்றின் வாடகை பாக்கி நிலவரங்கள் குறித்தும், கோவில்களில் வழக்கில் இருக்கும் சடங்குகளும் ஆன்மீக செய்முறைகளும் புழக்கத்தில் உள்ளனவா, அவற்றின் நிலவரம் என்ன என்பது குறித்தும், மக்களிடமிருந்து காணிக்கையாக பெறப்படும் தொகையின் நிலவரம் குறித்தும், கோவில் சார்ந்த செலவுகள் குறித்தும் ஆய்வுசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    2) வல்லுநர்களையும் சான்றோர்களையும் கொண்டு கமிஷன் அமைத்து, கோவில் நிர்வாகம் மட்டுமல்லாமல், கோவில் சடங்கு சம்பிரதாயங்களை முறையாய் கடைபிடிக்க வழிசெய்து, சமூகத்திடம் கோவில் நிர்வாகப் பொறுப்பை வழங்கத் தேவையானவற்றை ஆய்வுசெய்ய வேண்டி கோரிக்கை வைக்கப்படுகிறது.
    Published by:Yuvaraj V
    First published: