ஈஷா மஹாசிவராத்திரி தியானலிங்கத்தில் பஞ்ச பூத ஆராதனையுடன் தொடங்கும். தொடர்ந்து லிங்க பைரவி மகா யாத்திரை நடைபெறும். அதற்குப் பின் சத்குருவின் சொற்பொழிவு, நள்ளிரவு தியானங்கள் ஆகியவை நடக்கும். பின் கண்கவர் 3D ப்ரொஜெக்ஷன் வீடியோ மூலம் ஆதியோகி திவ்ய தரிசனம் அரங்கேறும்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதியான நாளை மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை சத்குரு முன்னிலையில் நடைபெறும். அப்போது அரங்கேறும் இணையற்ற இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும், வழிகாட்டப்பட்ட தியானங்களில் கலந்துகொள்ளவும் லட்சக்கணக்கானவர்கள் ஈஷா யோகா மையத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, ஈஷாவின் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் நேரடி ஒளிபரப்பு அனைத்து ஸ்ட்ரீமிங் சாதனைகளையும் தகர்த்து பெயர் பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு நடந்த மஹா சிவராத்திரி நிகழ்வு 192 நாடுகளில் 22 மொழிகளில் ஒளிபரப்பப்பட்டது. 14 கோடி பேர் நேரடி ஒளிபரப்பைப் பார்வையிட்டனர்.
2021ஆம் ஆண்டில், மார்ச் 14 அன்று ஒளிபரப்பப்பட்ட கிராமி விருதுகள் ஒளிபரப்பை விட, மார்ச் 11-12 அன்று நடந்த மஹாசிவராத்திரி நிகழ்வின் ஆன்லைன் பார்வையாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகமாக இருந்தது. அதேபோலவே இந்த ஆண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஷா மஹாசிவராத்திரியை யூடியூபில் நேரடியாகப் பார்க்க:
இன்ஸ்டாகிராமில் பின்தொடர:
https://www.instagram.com/p/CoHdLttrOyu/
ஈஷா மஹாசிவராத்திரிக்கு முன்னதாக, ருத்ராட்ச தீட்சை, கிரேஸ் ஆஃப் யோகா நிகழ்ச்சி, யாக விழா, மஹா அன்னதானம், மகா சிவராத்திரி சாதனா போன்ற பல்வேறு நிகழ்வுகளிலும் பக்தர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Isha, Maha, Maha Shivaratri