Home /News /spiritual /

Illuminati : ' இலுமினாட்டி தற்போது எதையும் கட்டுப்படுத்துவதில்லை' - சத்குரு

Illuminati : ' இலுமினாட்டி தற்போது எதையும் கட்டுப்படுத்துவதில்லை' - சத்குரு

இலுமினாட்டி

இலுமினாட்டி

Illuminati : நீங்கள் தற்போது எதை பற்றியும் கவலை படத் தேவை இல்லை. அவர்கள் தற்போது எதையும் கட்டுப்படுத்துவதில்லை. டொனால்ட் டிரம்ப் தான் தன்னுடைய கட்டுப்பாட்டில் நிறைய விஷயங்களை வைத்துள்ளார் என நகைத்துக்கொண்டே கூறினார்.

இலுமினாட்டி என்ற வார்த்தை பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில் அது குறித்து சத்குரு இளைஞர்களுக்கு விளக்கம் ஒன்றை கூறியுள்ளார்

இது குறித்து இளம் பெண் ஒருவர் சத்குருவிடம் கேள்வி எழுப்புகின்றார். அதில் சமீப காலத்தில் நிறைய விஷயங்களில் நான் இலுமினாட்டி குறித்து கேள்வி படுகின்றேன். வணிகம் , அரசியல் போன்றவற்றின் மூலமாக அவர்கள் இந்த உலகை ஆட்சி செய்கின்றனர். என நான் கேள்விப்பட்டேன். நிறைய தலைவர்கள் , துறவிகள் , குருமார்கள் அவர்களின் கண்ட்ரோலில் இருப்பதாக கூறுகின்றார்கள். நீங்க என்ன சொல்லறீங்க? என கேள்வி எழுப்புகின்றார். அதற்கு விளக்கமளிக்கும் சத்குரு சிரித்தவாறே, ‘ இல்லை. நான் அதுல இல்லை. அவர்கள் கண்ட்ரோலில் நான் இல்லை’ என கூறிவிட்டு இலுமினாட்டி எனும் வார்த்தை குறித்து பேசுகின்றார்.

நீங்கள் டான் பிரவுன் புத்தகங்கள் நிறைய படிக்கின்றீர்கள் என நான் நினைக்கின்றேன். இது ஐரோப்பா கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இப்பலாம் நாமளும் இத கொஞ்சம் உள்வாங்கிக்க ஆரம்பிச்சுட்டோம். ஆனால் ஐரோப்பாவில் சீக்ரட் ஸ்கூல் எனப்படுவது ஒரு காதல் விவகாரம் மாறி பாக்குறாங்க. இன்னைக்கு ரொம்ப பிரபலமாக இருப்பவர்கள் கூர் சாக்ரடீஸ் , அரிஸ்டாட்டில் கூட சீக்ரட்ஸ் ஸ்கூலின் அங்கமாக இருந்திருக்காங்க. எதுக்காக இப்படி சீக்ரட் ஸ்கூல் உருவாக்கனும். ஏன்னா சமூகம் எப்படி இருக்குனா தன்னோட உடன் படாத விஷயங்களை அழிச்சிரனும் எனும் மன நிலையில இருக்கு. எங்க அழித்தல் இருக்கோ அங்க தான் ஒரு ஸ்கூல், சீக்ரட் ஸ்கூல் ஆகும்.

இதையும் படியுங்கள் : குழந்தைகள் மீது பெற்றோர்கள் உரிமை எடுத்துக்கொள்வது தவறு : காரணத்தை விளக்கும் சத்குரு...

சீக்ரட் ஸ்கூல் ஐரோப்பாவில் அதிகம் இருக்க காரணம் என்னவென்றால் பழமைவாத மத நம்பிக்கைகளை எல்லாத்தையுமே முடக்கி வச்சது தான். எங்கெல்லாம் 10 பேர் கூடினாங்களோ அதெல்லாம் அழிக்கணும்னு நினைச்சாங்க. அந்த மக்களை கொல்லனும்னு நினைச்சாங்க. இதனால தான் சீக்ரட் ஸ்கூல் நடத்துனாங்க. இதுல நீங்க இலுமினாட்டினு சொல்ற விஷயம் பின்னாளில் ஃப்ரீமேசன் என மாறியது. இதுக்கு ஒரு வரலாறு சொல்றாங்க.

என்னால ஊர்ஜிதமாக இதனை கூற முடியவில்லை. ஒரு சில புத்தகங்களில் ஃப்ரீமேசன் இந்திய கொத்தனார்களால் தொடங்கப்பட்டு பின்னாட்களில் எகிப்த் போனது என எழுதியுள்ளனர். வேறு இடத்தில் பிழைச்சு வாழனும் என்பதால் உயிர் வாழ பல்வேறு ட்ரிக்ஸ் அவங்க உருவாக்கிக்கிட்டாங்க. அவங்களுக்குள்ளேயே பரிபாசைகள் உருவாக்கிக்கிட்டு அவங்களுக்குள்ள ரகசிய பாஷைகளில் பேசிக்கிட்டாங்க.

இதையும் படியுங்கள் : தீபாவளி கொண்டாட்டம் ஏன் அவசியம்..? சத்குரு விளக்கம்

அதன் மூலமாக விரோத போக்கில் செயல்பட்ட அந்த கலாச்சாரத்தில் உயிர் பிழைத்து வாழ்ந்தார்கள்.அங்க இருந்து தான் இது பரவுச்சு. இப்படித் தான் சில புத்தகங்களில் எழுதியிருக்காங்க. ஆனால் இதனை ஊர்ஜித படுத்துற மாறி வரலாற்று ஆதாரங்கள் இல்லை. ஆனால் இது நடப்பதற்கு சாத்தியம் உள்ளது. இங்க இருந்து கொத்தனார்கள் போனார்கள். இந்தியாவில் இருந்து போனவர்கள் கல் வேலை செய்தனர். பிரமிடுகள் கட்டினார்கள் என்பது நமக்குத் தெரியும். இதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளது.

வீடியோ வடிவில் காணfreemasonry எனும் இயக்கம் பின்னாளில் வலிமை அடைந்தது. அந்த இயக்கம் அமெரிக்கா சென்றவுடன் ரொம்ப ரொம்ப வலிமை அடைந்தது. ஏனென்றால் அங்கு நிலவி வந்த கிறிஸ்தவ ஒடுக்குமுறைகளால இதோட பலம் அதிகம் ஆச்சு. சுதந்திரமாக யோசிப்பவர்கள் தங்களை freemason என சொல்லிக்க ஆரம்பிச்சாங்க. பெயரில் தான் மேஷன். கொத்தனார் என சொல்லிக்கிட்டாங்க ஒழிய அவங்க அந்த தொழில் செய்யல. ஆனால் நீங்க ஒரு விஷயம் கவனிக்க முடியும். எங்கெல்லாம் freemason இருக்கோ அங்கெல்லாம் கட்டிடங்கள் டிசைன் அற்புதமாக இருக்கும். நான் நிறைய Freemason கோவில்களுக்கு போயிருக்கேன். சும்மா அவங்க கட்டிடங்கள் டிசைன் எனக்கு பிடிச்சதால போயிருக்கேன்.

இதையும் படியுங்கள் :  பிறரை நாம் எப்படி மதிப்பிடுவது..? சத்குரு பதில்...

அற்புதமாக கட்டியிருக்காங்க. அந்த கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக வடிவியல் முறை இருந்துள்ளது. அந்த காரணத்தினால் தான் அவர்களை பற்றி புத்தகம் எழுதுகிறவர்கள் இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் இந்தியாவின் யோகா கலாச்சாரம் வடிவியல் ஒருங்கமைப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது.

யோகா என்றால் எது நீங்கள் , எது இந்த பிரபஞ்சம் இவை இரண்டும் ஏதோ ஒரு விதத்துல நீங்க இந்த அண்டத்தோட பிரதிபலிப்பாகவும், இல்லையென்றால் அந்த அண்டம் உங்களின் பிரதிபலிப்பாகவும் மாறி விடும். இதனை நீங்கள் எப்படி பார்க்க விரும்பினாலும் சரி, எங்கெல்லாம் வடிவியலுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கபட்டுச்சோ அங்கெல்லாம் நிச்சயம் யோகிகள் போயிருக்கனும் என நாம கருத்துறோம். அந்த காலத்தில் உள் நிலையில் நீங்கள் வேலை செய்யாட்டி இந்த அளவிற்கு வடிவியல் நிலையில் நீங்கள் இருந்திருக்க மாட்டீர்கள். இப்போதெல்லாம் மக்கள் வடிவியல் படிக்கின்றனர். நிச்சயமாக வெளி நிலையில் தான் படிக்கின்றனர். இந்த உடல் எப்படி உருவாக்கப்பட்டுச்சு, கிரகங்கள் கூர்மையாக கவனிச்சு ஏற்படுற விண்வெளி அதிசயங்களை  பார்ப்பதன் மூலம் கத்துக்கிட்டாங்க.

இதையும் படியுங்கள் : இளைஞர்களுக்கு எந்த மாதிரியான ஊக்கம் வேண்டும்? - சத்குரு விளக்கம்!

அதனால ஒரு காலத்துல அவங்க ஒரு சில விஷயங்களை கட்டுப்படுத்தும் ஆற்றலோடு இருந்தாங்க. ஆனால் என்னை பொறுத்தவரை எல்லா சீக்ரட் ஸ்கூல் பத்தியும் ரொம்ப மிகைப்படுத்தி தான் இப்படியெல்லாம் பேசுறாங்க. நீங்கள் தற்போது எதை பற்றியும் கவலை படத் தேவை இல்லை. அவர்கள் தற்போது எதையும் கட்டுப்படுத்துவதில்லை. டொனால்ட் டிரம்ப் தான் தன்னுடைய கட்டுப்பாட்டில் நிறைய விஷயங்களை வைத்துள்ளார் என நகைத்துக்கொண்டே கூறினார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sadhguru

அடுத்த செய்தி