ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பகுதி சந்திர கிரகணம் 2021: கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?

பகுதி சந்திர கிரகணம் 2021: கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?

காட்சி படம்

காட்சி படம்

Partial Lunar Eclipse : இன்றைய நீண்ட நேர பகுதி சந்திர கிரகணம் சுமார் 21,693 வினாடிகள் நீடிக்க உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நவம்பர் 19 வெள்ளிக்கிழமையான இன்று பகுதி சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பிறகு நீண்ட நேர பகுதி சந்திர கிரகணம் ஏற்பட இருக்கிறது. இதே போன்ற நீண்ட பகுதி சந்திர கிரகணம் கடந்த 1440-ல் நிகழ்ந்தது. சந்திரகிரகணத்தின் போது சூரியன், பூமி, நிலவு மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும். இந்த சமயத்தில் நிலவு மீது விழக்கூடிய சூரிய ஒளியை பூமி முழுவதும் மறைத்தால் அது முழு சந்திர கிரகணம், சூரிய ஒளியை பூமி பகுதியளவு மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் என்று குறிப்பிடப்படுகிறது. இன்றைய நீண்ட நேர பகுதி சந்திர கிரகணம் சுமார் 21,693 வினாடிகள் நீடிக்க உள்ளது.

கிரகணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன, ஏனெனில் சூரியன் மற்றும் சந்திரன் உட்பட கிரகங்களின் இயக்கம் அல்லது கோள்களின் நிலை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் இவை உடலின் செரிமான அமைப்பை சீர்குலைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, கிரகணத்தின் போது சாப்பிடுவது அல்லது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அதே போல கிரகணங்கள் கர்ப்பிணி பெண்களின் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே கர்ப்பிணிகள் கிரகண நாளின் போது சில முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுவது நல்லதாக கருதப்படுகிறது.

நேரடி கதிர்..

கர்ப்பம் என்பது பெண்ணின் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றம் ஏற்படுத்துகிறது. பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, பொதுவாக சந்திர கிரகணம் அல்லது சந்திர கிரகணம் குழந்தை பிறக்கும் போது குறைபாடுகளை ஏற்படுத்தும். சூரிய அல்லது சந்திர கிரகணத்தின் போது அவற்றின் நேரடி கதிர்களை சந்திக்க நேரிடும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கருவின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை. இந்திய பாரம்பரியத்தில் கிரகணங்கள் கெட்ட சகுனங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. எனவே, தான் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

also read :தொற்று அச்சத்தில் அடிக்கடி கைகளை கழுவுதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்..

சந்திர கிரகணத்தின் போது பின்பற்றப்படும் நம்பிக்கைகளில் சில..

* வீட்டுக்குள்ளேயே இருத்தல்

* கூர்மையான பொருட்களை பயன்படுத்த கூடாது

* பழைய உணவை தவிர்த்தல்

ஆனால் கிரகணம் போன்ற நிகழ்வுகள் கர்ப்பத்திற்கு ஆபத்தானது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், இது குறித்த பயம் பல குடும்பங்கள் மற்றும் கலாச்சாரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. கிரகணத்தின் போது ஒரு கர்ப்பிணி வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது பிரச்சனையல்ல. என்றாலும் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு கர்ப்பிணி வீட்டில் இருக்க முடியாவிட்டால் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்து நேரிடும் என்று அர்த்தமல்ல. எனினும் குடும்ப உறுப்பினர்களின் மனஅமைதிக்காக கர்ப்பிணிகள் கீழ்காண்பவற்றை கடைபிடிக்கலாம்..

* கிரகண நேரத்தின் போது முடிந்த வரை வீட்டிலேயே தங்கி நன்றாக ஓய்வு எடுப்பது

* கத்தி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது அல்லது காயம் ஏற்பட கூடிய ஆபத்தான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது

* கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் தூங்குவதை தவிர்க்கலாம்

* கிரகணத்திற்கு முன்பே தேவையான அளவு சாப்பிட்டு விட்டு, கிரகணத்தின் போது சாப்பிடுவது அல்லது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்

அறிவியலாளர்கள் கர்ப்பிணிகளுக்கும் கிரகணங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்கள்.

வழக்கமான நாள்களில் சூரியன் எப்படி இருக்குமோ அப்படித்தான் சூரியகிரகணம் நடக்கும் நாளிலும் இருக்கும்.

அதே நேரத்தில் வெறும் கண்ணால் சூரியனைப் பார்க்கக்கூடாது.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Lunar eclipse, Pregnancy