ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மதுரை, ராமேஸ்வரம், திருப்பதிக்கு கம்மி விலை ஆன்மீக டூர் பேக்கேஜை அறிவித்த ஐஆர்சிடிசி!

மதுரை, ராமேஸ்வரம், திருப்பதிக்கு கம்மி விலை ஆன்மீக டூர் பேக்கேஜை அறிவித்த ஐஆர்சிடிசி!

ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி

தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஐஆர்சிடிசி புதிய டூர் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC), ரயில்வே பயணிகளுக்கான பயணத்தை எளிதாக்க மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக மாற்ற பல்வேறு டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் Paradise on Earth போன்ற சில ட்ராவல் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது ஆன்மீக பக்தர்களுக்கான ஒரு ஸ்பெஷல் ட்ரெயின் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மலிவு விலை டூர்பேக்கேஜ் மூலம் இப்போது யாத்ரீகர்கள் மதுரை, ராமேஸ்வரம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல தென்னிந்திய ஆன்மீக தலங்களுக்கு ஸ்வதேஷ் தர்ஷன் (Swadesh Darshan) டூரிஸ்ட் ரயிலில் பயணம் செய்யலாம். இந்த பேக்கேஜ் மதுரை, ராமேஸ்வரம், திருப்பதி தவிர மேலும் சில முக்கிய ஆன்மீக ஸ்தலங்களை உள்ளடக்கியது. இந்த பேக்கேஜ் கொண்ட ஸ்பெஷல் ரயில் வரும் நவம்பர் 14, 2022 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  டூர் பேக்கேஜிங்கிற்கான கட்டணம் ரூ.17,640 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை, ராமேஸ்வரம் மற்றும் திருப்பதி ட்ரெயின் டூர் பேக்கேஜ் மொத்தம் 8 இரவுகள் மற்றும் 9 பகல்களைக் கொண்ட பயணமாக இருக்கும் என்றும் இதன் போது தினசரி 3 வேளை உணவுகளும் பயணிகளுக்கு வழங்கப்படும் என்றும் IRCTC வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுகளுக்குச் சைவ வகை உணவுகளே பயணிகளுக்கு வழங்கப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த  டூர் பேக்கேஜில் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பயணம், ஏசி அல்லாத தங்கும் விடுதிகள்/ஹால் (தரம்சாலா விடுதி) மற்றும் பயணிப்பதற்கான பேருந்து சேவைகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்களும் அடங்கும்.

Also Read : வெறும் ரூ.399க்கு 10 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் திட்டம்..! - அசத்தும் பிரபல வங்கி

இந்த பேக்கேஜில் உலக புகழ் பெற்ற திருப்பதி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் உள்ளிட்ட புகழ் பெற்ற மற்றும் பிரபலமான கோயில்கள் இடம்பெற்று உள்ளன. இந்த டூர் பேக்கேஜ் தொடர்பாக அதிகாரபூர்வ ட்விட்டர் பேஜில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளது IRCTC.  அதில், ‘ராமேஸ்வரம், மதுரை மற்றும் பல இடங்களுக்கு எங்கள் இந்த டூர் பேக்கேஜ் மூலம் சென்று ஆன்மீக அனுபவத்தைப் பெறுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.

ஸ்வதேஷ் தர்ஷன் டூரிஸ்ட் ட்ரெயின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள இந்த டூர்பேக்கேஜில் வசதியான ஏசி அல்லாத 55 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் பயன்படுத்தப்படும். தவிர ஒவ்வொரு பயணிக்கும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில் வழங்கப்படும். பாதுகாப்பிற்காக ரயிலில் டூர் எஸ்கார்ட் மற்றும் செக்யூரிட்டி இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஆன்மீக பயணிகள் IRCTC-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் இந்த  ட்ரெயின் ட்ராவல் பேக்கேஜை புக்கிங் செய்து கொள்ளலாம்.

Published by:Janvi
First published:

Tags: IRCTC, Temple, Tour