ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மதுரையில் இருந்து புறப்படும் இராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்: முழு விவரம்

மதுரையில் இருந்து புறப்படும் இராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயில்: முழு விவரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஹம்பி,  நாசிக், சித்திரக்கூடம்,  காசி, கயா,  சீதாமார்ஹி, சீதா ஜென்ம பூமி,  ராம ஜென்ம பூமி, நந்திகிராம்,  சிருங்க வெற்பூர், அலகாபாத் போன்ற இராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களை  தரிச்சிகலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களை சுற்றிப் பார்க்கும் வகையில் இராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயிலை இயக்கவுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

  இந்தியன் ரயில்வே சார்பில் அவ்வப்போது சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும். இந்த ரயில் சேவையானது இயற்கை சுற்றுலா இடங்களுக்கும் , ஆன்மீக சுற்றுலா தலங்களும் இயக்கப்படும். அந்த வகையில் இராமாயண காவிய யாத்திரை சிறப்பு ரயிலை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும்  சுற்றுலாக் கழகம் (IRCTC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” மதுரையில் இருந்து வரும் நவம்பர் 16ம் தேதி அன்று ‘அரிதான இராமாயண யாத்திரை சிறப்பு ரயில்’ புறப்பட்டு திண்டுக்கல்,  திருச்சி,  கும்பகோணம், கடலூர்,  விழுப்புரம்,  சென்னை எழும்பூர் வழியாக செல்கிறது.

  ஹம்பி,  நாசிக், சித்திரக்கூடம்,  காசி, கயா,  சீதாமார்ஹி, நேபாளம் ஜனக்புரியில் உள்ள சீதா ஜென்ம பூமி,  அயோத்தியில்  ராம ஜென்ம பூமி, நந்திகிராம்,  சிருங்க வெற்பூர், அலகாபாத் போன்ற சரித்திர புகழ்பெற்ற இடங்களில் உள்ள  இராமாயண காவியத்துடன் தொடர்புடைய இடங்களை  தரிச்சிகலாம்.

  இதையும் படிக்க: வெற்றி தரும் விநாயகா!

  14 நாட்கள். உணவு, தங்குமிடம், ரயில், உள்ளூர் போக்குவரத்து உட்பட ரூ.14490 மட்டுமே கட்டணம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசின் கொரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சிறப்பு சுற்றுலா புறப்பட உள்ளது. பயணிகள் கண்டிப்பாக் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: பூஜைக்கு ஆகாத மலர்கள் என்னென்ன தெரியுமா?

  இதற்கு, மத்திய மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி. பெறலாம் என்றும் டிக்கெட் முன்பதிவு  ஏஜெண்டுகள் இந்த யாத்திரைக்கு முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை-9003140680, திருச்சி -8287931974, மதுரை -8287931977 ஆகிய அலைபேசி எண்கள் மூலமும், www.irctctourism.com என்ற இணைய தளம் வாயிலாகவும் முன் பதிவு செய்யலாம்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: IRCTC, Special trains