Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (22 ஜூன் 2022) செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் அதிக லாபம் தரும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (22 ஜூன் 2022) செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் அதிக லாபம் தரும்..!

Numerology

Numerology

Numerology | ஜூன் 22 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் சில பாதக சூழல்களை எதிர்கொள்ளலாம் என்பதால் நேர்மறையாக இருங்கள் மற்றும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். முதலில் சிக்கலாக தொடங்கும் விஷயம் முடிவில் உங்களுக்கு சாதகமானதாக மாறும். சொத்துக்களை விற்று பணம் சம்பாதிக்க சிறந்த நாள். டிராவல் ஏஜென்சிஸ், புத்தகங்கள், மருந்துகள்,மற்றும் கட்டுமானப் பொருட்கள் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். ஆசிரியர்கள் அல்லது பயிற்சியாளர்களிடமிருந்து குழந்தைகள் பாராட்டுகளை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிறு

அதிர்ஷ்ட எண் - 1

தானம் - பிச்சைக்காரர்களுக்கு வாழைப்பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று மற்றவர்களின் ஏமாற்று செயல்கள் அல்லது குறும்புகளில் சிக்கி நீங்கள் பாதிக்கப்படலாம் என்பதால் கவனமாக இருக்கவும். உங்கள் உணர்வு மற்றும் லட்சியங்களையும் அடக்க சிலர் முயற்சிப்பார்கள். உங்கள் மரியாதையை சிலர் கெடுத்து உங்கள் மனதை புண்படுத்த நினைப்பார்கள். எச்சரிக்கை தேவை. . டிரான்ஸ்போர்ட் மற்றும் டிராவல் தொழிலில் புதிய சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளை இனிப்புகளை தானம் கொடுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடனான உங்கள் உறவுகள் மூலம் நீங்கள் மன அழுத்தத்தை அனுபவிப்பீர்கள்.குழப்பம் ஏற்படாமல் இருக்க உங்கள் பேச்சில் தெளிவு வேண்டும். இன்று எடுக்கும் அனைத்து முடிவுகளும் குறிப்பாக இசைக்கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், தயாரிப்பாளர்கள், மருத்துவர்கள் தாமதத்தை கொண்டு வரும். இன்று நீங்கள் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் அதிக லாபம் தரும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வியாழன்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1

தானம் - வீட்டில் வேலை செய்யும் பெண் உதவியாளருக்கு குங்குமப்பூ தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இது உங்களுக்கு செயல்திறன் சார்ந்த நாள் என்பதால் சோம்பலை மறந்துவிட்டால் நீங்கள் சாதனையாளர் மற்றும் வெற்றியாளராக மாற முடியும். ஊடகம், மார்க்கெட்டிங், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் சாதகமாக இருக்கும். உங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். இன்று சைவ உணவு மற்றும் தியானத்தை பின்பற்றுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - பிச்சைக்காரர்களுக்கு சிட்ரஸ் பழங்களை தானம் செய்ய வேண்டும்

#எண் 5 (நீங்கள் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று சரியான முடிவுகளை எடுக்க உங்கள் அறிவு கூர்மை உங்களுக்கு துணைபுரியும். தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் நாள். வங்கியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சிறப்பு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கலாம். மார்க்கெட்டிங் மற்றும் ஸ்போர்ட்ஸில் உள்ளவர்களுக்கு இன்று சாதகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம் - அக்வா

அதிர்ஷ்டமான நாள் - புதன்

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - ஏழைகளுக்கு பச்சை வாழைப்பழங்களை தானம் செய்ய வேண்டும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று புதிய வாய்ப்புகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும் மற்றும் தற்போதைய வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். திறன்கள் மற்றும் சுயவிவரத்தை மேம்படுத்த நேரத்தை செலவிட இன்று சிறந்த நாள்.புதிய வீடு அல்லது வேலை தேடுபவர்கள், தங்களுக்கு விருப்பமானவற்றை இன்று பட்டியலிடலாம். வேலை நிமித்தமாக பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் - டீல்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஏழைகளுக்கு இனிப்புகளை வழங்க வேண்டும்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

எதிர்கால வளர்ச்சிக்காக புதிய வகுப்புகள் அல்லது படிப்புகளில் சேர இன்று நல்ல நாள். அரசு அதிகாரிகள், இளம் அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள், விநியோகஸ்தர்கள் தொழிலில் முன்னேற்றம் காண உங்கள் தாயின் ஆசிகளை வாங்கி கொள்ளுங்கள். இன்று விவாதங்களைத் தவிர்க்கவும். இன்று பங்குச் சந்தையில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்

அதிர்ஷ்ட எண் - 7

தானம் - கோவிலில் சூரியகாந்தி எண்ணெய் தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் போது உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டால் நன்மைகள் நடக்கும் என்பதற்கு உத்தரவாதம். மாலைக்குள் அதிக புகழ் பெறுவீர்கள். உயர்நிலை அறிவை பெறுவதற்கு இன்று நீங்கள் அதிக நேரம் செலவிடுவீர்கள். மருத்துவர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - பழுப்பு மற்றும் கருப்பு

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளி

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - ஒரு பிச்சைக்காரருக்கு சிவப்பு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பங்குசந்தை தரகர்கள், நகை கடைக்காரர்கள், நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் நீண்ட நாளுக்குப் பிறகு சிறப்பு மதிப்பீட்டை பெறுவார்கள். காதலில் உள்ளவர்கள் தங்கள் பார்ட்னரிடம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். திடீர் பண வரவு இருக்கலாம். ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாடல்கள் இன்று புதிய சலுகையை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - தேவைப்படுவோருக்கு தக்காளியை தானம் செய்யுங்கள்

ஜூன் 22-ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: டாம் ஆல்டர், அம்ரிஷ் பூரி, அனுபவ் சிங், விஜய், நிதின்பாய் படேல், தேவிநேனி நேரு
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி