Home /News /spiritual /

பூஜையறையில் இவற்றை கண்டிப்பாக செய்யாதீர்கள்...

பூஜையறையில் இவற்றை கண்டிப்பாக செய்யாதீர்கள்...

பூஜை

பூஜை

tips For Pooja Room | எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    1. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

    2. நைவேதியம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

    3. அன்னம் முதலியவற்றை எவர் சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

    4. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

    5. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

    Also see... வைகாசி மாதத்தின் சிறப்புகள்...

    6. சாமி படங்களில் காய்ந்து போன பூக்களை அப்படியே விட்டு வைக்கக் கூடாது.

    7. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம்.  ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

    8. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும்.

    9. வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

    Also see... பூஜை பாத்திரங்களை பளபளவென்று சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

    10. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

    11. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீட்டை மொழுகுதல் கூடாது. பூஜை பாத்திரங்களையும் கழுவுதல் கூடாது... அப்படி செய்தால் அஷ்ட லட்சுமிகளும் போய்விடுவார்கள் என்பது நம்பிக்கை....
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி