இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி அவா்களின் மீது இறைவன் அல்லாஹ் அவா்களால் புனித குரான் இறக்கி வைக்கப்பட்டது என்று இஸ்லாமிய புராணங்கள் தொிவிக்கின்றன. ரம்ஜான், ரமலான் பண்டிகை என்று மக்களால் அழைக்கப்படும் இந்தப் பண்டிகையை ஈதுல் ஃபித்ர் என்றும் கூறப்படுகிறது. தமிழ் நாட்காட்டி சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
இஸ்லாமியர்கள் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையிலேயே மாதங்களைக் கணக்கிடுவர். ரமலான் மாதம் இறைவனை நெருங்கவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் கருதுகின்றனர். இஸ்லாமிய நாள்காட்டியில் ஒன்பதாவது மாதமான ரமலானில் நோன்பு தொடங்குவார்கள். சந்திர உதயத்தைப் பொருத்து பிறை தென்படுவதைப் பொருத்தும் சில நாடுகளில் கால வேறுபாடுகளுடன் நோன்பு தொடங்கும். 30 நாட்கள் நோன்பு இருந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
ரமலான் என அழைக்கப்படும் நோன்பு காலம் முஸ்லிம்களின் வசந்த காலம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரமலானின் மகத்துவத்தில் நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன. முஸ்லிம்களின் மாதங்களான 12 மாதங்களில் ரமலான் மாதத்திற்குதான் சிறப்பு தன்மைகள் பல உள்ளதாக முஸ்லிம் சான்றோர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் நோன்பு திறத்தலை இப்தார் என்று அழைக்கின்றனர். நோன்பு திறக்கும்போது சரியான நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமன நேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். ஊர்விட்டு ஊர் செல்லும் பயணிகள், நோயாளிகளை தவிர அனைவருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
மாதவிடாய் காலங்களைத் தவிர மற்ற நாட்களில் பெண்கள் நோன்பு இருப்பது கடமையாகும். நோன்பு இருக்கும் நேரத்தில் ஐங்கால தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.
நோன்பு இருப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். புறம் பேசுதல், பொய் சொல்லுதல், பிறருக்கு துன்பம் விளைவித்தல், பிறர் மணம் புண்படுமாறு பேசுதல் கூடாது.
நோன்பு இருக்கும் நேரத்தில் தவறான வார்த்தைகளையோ, தவறான செயல்களையோ பயன்படுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
நோன்பு இருப்பதன் மூலம் உடலின் அனைத்து பாகங்களும் ஓய்வெடுக்கின்றன. குறிப்பாக குடல் எனப்படும் வயிற்றின் முக்கிய உறுப்புக்கள், ஒரு மாதம் ஓய்வு பெறுவதன் மூலம் பலவிதமான நோய்களில் இருந்து மனிதன் காக்கப்படுகின்றான்.
வருடம் ஒன்றின் 365 நாட்களும் உணவு அரைபொருள் நிலையமாக திகழும் மனிதனின் உடல், நோன்பு எனப்படும் 30 நாள் விரதத்தால், ஓய்வு பெறுகிறது. இதன் மூலம் உடல் புத்துணர்வு பெறுகிறது. ரமலான் மாதத்தில் குர்ஆன் ஓதுபவர்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
Also Read...
2022 ஆம் ஆண்டின் முஸ்லீம் பண்டிகைகள், விஷேசங்கள் - முழு தகவல்கள்
2022 ஆம் ஆண்டின் கிறிஸ்தவ பண்டிகைகள் - முழு தகவல்கள்
2022 ஆம் ஆண்டின் இந்து பண்டிகைகள், விஷேசங்கள் - முழு தகவல்கள்
ரமலானின் சிறப்புகள்
1. இந்த மாதத்தில் தானம், தர்மம் அதிக அளவில் செய்ய வேண்டும்.
2. இல்லாதோருக்கு இருப்போர் உதவ வேண்டும். .
3. நோன்பிருக்கும் காலங்களில் நன்மைகள் செய்து தீமைகளை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4. நோன்பு திறப்பதற்கு தண்ணீர் அல்லது பேரிச்சம் பழத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. ரமலான் மாதம் நன்மையை மட்டும் போதிக்கவில்லை. ஒற்றுமையையும் போதிக்கிறது.
6. ரம்ஜான் நாளன்று நோன்பு இருப்பது கூடாது. 30 நாட்களில் விட்ட நோன்புகளை ரம்ஜான் பெருநாளுக்குப் பின்னர் வரும் முதல் 6 நாட்களில் மீண்டும் இருந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Festival, Muslim Religion, Ramadan Fasting, Ramzan