Home /News /spiritual /

உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்கினால் யோகம் தெரியுமா?

உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்கினால் யோகம் தெரியுமா?

குரு பகவான்

குரு பகவான்

Rasi Palan god Worship | உங்கள் ராசிக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமா? அப்போ இந்த கடவுள்களை வணங்காமல் இருக்காதீர்கள்...

    ஜோதிடத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் இருக்கும் அத்துடன் அது முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆகையால் அந்த கிரகத்தின் அதிகபதியாக விளங்கும் கடவுளை ஒருவர் வணங்குவதன் மூலம் பலவித அதிஷ்டங்கள் அவர்களது வாழ்வில் வந்து சேரும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது...

    மேஷம்

    மேஷ ராசியை ஆளும் கிரகமான செய்வாயின் பலத்தை அதிகரிக்க, மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்கினால் சிறந்த பலன் உண்டு.

    ரிஷபம் 

    ரிஷப ராசியை ஆளும் கிரகமான சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, ரிஷப ராசிக்காரர்கள் லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.

    மிதுனம் 

    மிதுன ராசியை ஆளும் கிரகமான புதனின் பலத்தை அதிகரிக்க, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.

    கடகம் 

    கடக ராசியை ஆளும் கிரகமான சந்திரனின் பலத்தை அதிகரிக்க, கடக ராசிக்காரர்கள் கௌரி அம்மனை வணங்கினால் அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

    சிம்மம் 

    சிம்ம ராசியை ஆளும் கிரகமான சூரியனின் பலத்தை அதிகரிக்க, சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.

    மேலும் படிக்க... 2022 ஆம் ஆண்டின் இந்து பண்டிகைகள், விஷேசங்கள் - முழு தகவல்கள்

    கன்னி

    கன்னி ராசியை ஆளும் கிரகமான புதனின் பலத்தை அதிகரிக்க, கன்னி ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்கினால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும்.

    துலாம்

    துலாம் ராசியை ஆளும் கிரகமான சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க, துலாம் ராசிக்காரர்கள் லட்சுமி தேவியை வணங்கினால் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருகும்.

    விருச்சிகம் 

    விருச்சிக ராசியை ஆளும் கிரகமான செவ்வாயின் பலத்தை அதிகரிக்க, விருச்சிக ராசிக்காரர்கள் சிவனை வணங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்.

    மேலும் படிக்க... சனி பகவானின் இந்த காயத்திரி மந்திரத்தை சொல்ல கை மேல் பலன் கிடைக்கும்..

    தனுசு

    தனுசு ராசியை ஆளும் கிரகமான குருவின் பலத்தை அதிகரிக்க, தனுசு ராசிக்காரர்கள் சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.

    மகரம்

    மகர ராசியை ஆளும் கிரகமான சனியின் பலத்தை அதிகரிக்க, மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.

    கும்பம்

    கும்ப ராசியை ஆளும் கிரகமான சனியின் பலத்தை அதிகரிக்க, கும்ப ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் எதிலும் நன்மை கிட்டும்.

    மீனம்

    மீன ராசியை ஆளும் கிரகமான குருவின் பலத்தை அதிகரிக்க, மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி