திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதம் திருப்பாவையில் இருந்து தினமும் ஒரு பாடலை பாடி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. மேலும், பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை மனமுருகி வேண்டிக் கொண்டு வழிபட்டாலும், வாரணம் ஆயிரம் பாடி வந்தாலும் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
ஜாதகத்தில் தோஷங்களோ, களத்திர ஸ்தானத்தில் கிரகங்களின் நிலைசரியில்லாமல் இருந்தாலோ, கிரகங்களின் பார்வை சரியில்லாமல் இருந்தாலோ திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் திருமணம் நடக்கலையே என்ற கவலை இருந்துக்கொண்டே இருக்கும். எனவே திருமண தடை நீங்க மார்கழி மாதம் திருப்பாவை பாடி ஆண்டாளை தரிசனம் செய்தால் போதும் திருமண தடை நீங்கி மனதிற்கு பிடித்த வரன் கிடைக்கும்.
பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளை வேண்டி விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாத கன்னியருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
Also see.. பிறந்தது மார்கழி மாதம்... திருப்பாவை, திருவெம்பாவை பாடல் -1
விரதம் இருக்கும் முறை
1. சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
2. விரதம் இருக்கும் பெண்கள், தங்கள் விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம்.
3. ஆண்டாள், பெருமாள் படம் வைத்து பூ தூவி காலையும், மாலையும் வழிபாடு செய்யலாம்.
4. இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள்புரிவாள் என்பது நம்பிக்கை
5. அதனால் திருமணத்தடைகளும் நீங்கும். உடனே திருமணம் நடக்கும்.
Also see... மார்கழி மாதம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன... மார்கழியின் சிறப்புகள் என்ன?
திருப்பாவை பாடலின் சிறப்புகள்
திருப்பாவையில் உள்ள 30 பாடல்களில் முதல் 5 பாடல்கள் மார்கழி நோன்பு பற்றியும், அடுத்த 10 பாடல்கள் தோழிகள் அதிகாலையில் எழுப்பப்படுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு அடுத்த 10 பாடல்கள் கண்ணனை கண் விழிக்க செய்யும், கடைசி 5 பாடல்கள் பாவை நோன்பின் பயன்கள் பற்றியும் சொல்கிறது.
Also see... மார்கழி மாதம் 2022 - விழாக்கள், விசேஷங்கள் மற்றும் விரத நாட்கள்!
திருப்பாவையின் 30 பாடல்களையும் கற்பவர்கள் எப்போதும் திருமால் அருளால் பூ உலகிலும், வான் உலகிலும் இன்ப வாழ்க்கை வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அவ்ர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aandal, Margazhi, Thiruppavai