ஆடி மாதத்தில் விதைத்தால் செழித்து வளரும் என்பதைப் போல, எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. பெரும்பாலானோர் அவர்களால் முடிந்த அளவு தங்கமாவது அல்லது வெள்ளி வாங்குவது வழக்கம். தங்கம் வாங்க முடியாதவர்கள் மஞ்சள், உப்பு வாங்கி வீட்டில் வைப்பார்கள். அப்படி செய்தால் வீட்டில் மங்களம் பெருகும் என்பதும் நம்பிக்கை.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதம் என்பது நமக்கு தெரியும். தமிழகத்தில் உள்ள கிராமங்களில் எந்த கோயில் இருக்கிறதோ இல்லையோ ஏதேனும் ஒரு அம்மன் கோயில் இருக்கும். இந்த கோயிகளில் திருமணம் போன்ற உறவு சார்ந்த சுப காரியங்களைத் தவிர ஏனைய சுப காரியங்கள் தினமும் நடைபெரும். அதிலும் இப்போது கொரோனா காலமாக உள்ளதால் அனைவரும் அவர்களின் ஊர்களில் உள்ள சிரிய கோவிலானாலும் அங்கேயே சுப காரியங்களை முடித்துக்கொள்கின்றனர்.
மேலும் படிக்க... Aadi Perukku 2021 | ஆடிப்பெருக்கில் தாலிப்பெருக்குதல் சிறப்பு... ஏன் தெரியுமா?
அதிலும் ஆடி பதினெட்டு நாளான இன்று விவசாயம் செழிக்க மாரியம்மனை வழிபடக்கூடிய அற்புத நாள். ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப இந்த மாதத்தில் விதைத்தால் செழித்து வளரும் என்பதைப் போல, இந்த ஆடி 18ல் வாங்கும் எந்த ஒரு பொருளும் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் பெரும்பாலானோர் இன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க முயற்சிப்பர்.
ஆடிப் பெருக்கு மங்களத்தைப் பெருக்கித் தரக்கூடிய அற்புத நாள். இந்த நாளில் வசதி இருந்தால் அதற்குத் தகுந்தார் போல தங்கம் அல்லது வெள்ளி வாங்கலாம். இல்லையெனில். அதற்கு இணையான மங்களத்தை தரக்க்கூடிய மிக எளிதாக கிடைக்கும் பொருட்களான மஞ்சள், உப்பு வாங்கலாம்.
மஞ்சள் கிழங்கு வாங்கி ஒரு பாத்திரத்தில் நிரம்பும் படி போட்டு வைக்க வேண்டும். குண்டு மஞ்சள் மகாலட்சுமியின் ஸ்வரூபமாகக் கருதப்படுகிறது. மங்களத்தை அருளும் மஞ்சள் தங்கத்திற்கு இணையானது. அதனால் தான் தாலியில் தங்கத்திற்குப் பதிலாக மஞ்சளும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க... குழந்தை வரம் அருளும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை கோவிலின் சிறப்புகள்!
அப்படியே தாலி தங்கமாக இருந்தாலும் அதில் மஞ்சளும், குங்குமமும் வைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மகாலட்சுமி, குபேரனின் அம்சமாக உப்பு பார்க்கப்படுகிறது. கடைக்கு சென்று புதிதாக கல் உப்பு வாங்கி உங்கள் உப்பு ஜாடியில் போட்டு வையுங்கள். இதையும் செய்ய முடியாதவர்கள் இல்லாதவரக்ளுக்கு தானம் வழங்குங்கள். நாம் தானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியம், ஆடி பெருக்கில் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
மேலும் படிக்க... ஆடி பெருக்கின் ஸ்பெஷல் நாவல்பழம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi