• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? அப்போ தினமும் கோவிலுக்கு செல்லுங்கள்!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா? அப்போ தினமும் கோவிலுக்கு செல்லுங்கள்!

ஸ்ரீரங்கம் கோவில் - திருச்சி

ஸ்ரீரங்கம் கோவில் - திருச்சி

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இனிமேலாவது, உங்கள் ஊர் கோயில்களைப் புதுப்பியுங்கள்.

  • Share this:
    ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் கோவிலுக்கு செல்வது நல்லது. அதுவும் நவகிரக வழிபாடு அவசியம். பொதுவாக அருவிகளில் குளித்தாலோ, மலைப்பிரதேசங்களான ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்றாலோ, கடற்கரைப் பக்கம் போனாலோ உடலுக்கு நல்லது என்கிறது அறிவியல். இங்கே போனால் சுத்தமான காற்றை சுவாசிப்போம். உடல் ஆரோக்கியமடையும். இயற்கையோடு ஒன்றியிருந்தால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆனால், இருக்கிற விலைவாசியில், அந்தப் பக்கமெல்லாம் எல்லாராலும் போய் வர முடிவதில்லை.

    இந்தக் குறையைத் தீர்க்கத் தான்நம் முன்னோர்கள் உள்ளூரிலேயே கோயில்களைக் கட்டி வைத்தார்கள். ஒரு ஊரில் ஒரு கோயிலாவது இருக்க வேண்டும் என்று செல்லி சென்றுள்ளனர். காரணம் கோயில் கருவறையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். அப்போது, அப்பகுதியில் காற்று மண்டலம் ஈரமாகும். எதிர் மின்னோட்டம் அதிகமாகும். ஈரப்பதமும், எதிர் மின்னோட்டமும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும்.



    மேலும் படிக்க... ஆடி பெருக்கின் ஸ்பெஷல் நாவல்பழம்!

    சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கும் போது, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பெல்லாம் சீராகும். இதனால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இனிமேலாவது, உங்கள் ஊர் கோயில்களைப் புதுப்பியுங்கள். தினமும் அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். கோயில்களுக்கு தினமும் சென்று வாருங்கள். உங்கள் உடலுக்கு நல்லது.

    நவகிரங்களில் நோய் தடுப்பாற்றலுக்கு அனைத்து கிரகங்களையும் வழிபடவேண்டும் என்றாலும் குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும். தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்வது சிறப்பு.

    மேலும் படிக்க... கொரோனாவால் டெல்டா மாவட்டங்களில் கலை இழந்த ஆடிப்பெருக்கு...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: