• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • கேதுபகவான் இங்கு இருந்தால் வெளிநாட்டு யோகம்தான்!

கேதுபகவான் இங்கு இருந்தால் வெளிநாட்டு யோகம்தான்!

கேது பகவான்

கேது பகவான்

கேதுபகவான் தேய்பிறையின் கணுவாகும். ஜோதிடத்தில் நிழல் கிரகமாக பார்க்கப்படுகிறது. கேது மனித வாழ்விலும், படைப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக நம்பப்படுகிறது.

 • Share this:  ஜோதிட சாஸ்திரத்தில் கேது பகவானுக்கு 'மாற்றங்களைத் தரும் கிரகம்' என்று பெயர். எந்த ஒரு விஷயத்திலும் மாற்றங்களைக் குறிப்பவர் கேது. ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றம், சூழ்நிலைக் காரணமாக எடுக்கும் நிலைப்பாடு ஆகியவை,  இவரின் தசை, புக்தி. அந்தரங்களிலோ அல்லது கேதுவின் சாரம் போன்ற தொடர்புகளைப் பெற்ற கிரகங்களின் தசை புக்தி அந்தரங்களி லோதான் நடக்கும்.

  ஒருவருக்கு வேலை கிடைப்பது, வேலை பறிபோவது, வாழ்க்கையைத் தலைகீழாக்கும் நல்லதும் கெட்டதுமான மாற்றங்கள், போன்றவற்றைக் கேதுதான் தருவார்.


  சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் போன்றவற்றில் அமர்ந்தோ 8, 12 இடங்களுடன் தொடர்பு கொண்டோ இருக்கும் கேது ஒருவரை வெளிநாட்டில் நிரந்தரமாகக் குடியேற வைப்பார்..
  தான் அமரும் பாவத்தைக் கெடுத்துப் பலன்களைத் தரும் ராகு பகவான் போல கேது கெடுப்பது இல்லை. அமரும் வீட்டைப் பலவீனமாக்கும் அளவுக்கு அதிகமான பலம் கேதுவுக்குக் கிடையாது.

  திருமணம் மற்றும் புத்திர தோஷங்களைக் கொடுக்கக்கூடிய 2, 5, 7, 8 - ம் இடங்களில் ராகு இருப்பது போன்று இவர் கெடுபலன்களைச் செய்வது இல்லை. கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்குச் சுப, சூட்சும வலுவுடன், லக்ன சுபர்களின் தொடர்பு இருக்கும் நிலையில் கேது நன்மைகளைச் செய்வார்.


  செவ்வாயின் லக்னங்களான மேஷம், விருச்சிகம் ஆகிய இரண்டுக்கும் லக்னாதிபதியைப் போலச் செயல்பட்டு நன்மைகளைச் செய்வார். 6, 8 - ம் வீட்டுக்குடையவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது மட்டுமே மேற்கண்ட ஆறு லக்னங்களுக்கும் கேது சாதகமற்ற பலன்களைத் தருவார்.


  கேதுவுக்கு விருச்சிகம், கன்னி, கும்பம் ஆகியவை நன்மைகளைத் தரும் இடங்கள். சில மூலநூல்களில் மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு இடங்களில் இருக்கும் ராகு நன்மைகளைச் செய்வார் என்றும் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு இடங்களில் இருக்கும் கேது நன்மைகளைச் செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய சர ராசிகளில் இருக்கும் ராகு,கேதுக்கள் தங்களின் தசா புக்தி நடக்கும்போது ஒருவருக்கு இருக்கும் நிலைகளில் மாற்றங்களைத் தருவார்கள். அது வேலை, தொழில், வாழ்க்கை, இருப்பிடம் போன்ற அனைத்து நிலைகளிலும் இருக்கும்.

  கேது பகவானிற்கு எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். மேலும் சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம் ஆகும். இவற்றின் நட்பு ராசிகள் மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகும். சமமான ராசி இல்லை. பகை ராசிகள் மேஷம், கடகம் மற்றும் சிம்மம் ஆகும்.

  மேலும் படிக்க... பரிகாரம் இல்லாத தோஷங்கள் என்னென்ன?

  தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு-கேதுவை வணங்க தோஷங்கள் நீங்கும். லக்னத்திற்கு 12-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் தனிமையை விரும்புவார்கள்.

  12ல் கேது இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்

  ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். பிரயாணங்களின் மீது விருப்பம் கொண்டவர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு இருக்கும். சிலருக்கு கண்களில் பாதிப்பு உண்டாகும். மனதில் எப்போதும் துன்பங்களை கொண்டவர்கள். அலைபாயும் மனதை உடையவர்கள். மன அமைதியின்றி இருக்கக்கூடியவர்கள். வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயமின்மை ஏற்படும். அனைத்து மக்களுடனும் பழகக்கூடியவர்கள்.

  மேலும் படிக்க... தோஷங்கள் நீக்கும் விநாயகர்... 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய பிள்ளையார்கள்...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: