இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ( solar eclipse in 2023 ) வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ உள்ளது. பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் சூரிய கிரகணம் கூறுகின்றனர். இந்த நிகழ்வின்போது, நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழும்.
அடுத்த மாதம் நிகழ் இருக்கும் கிரகணமானது நிங்கலூ சூரிய கிரகணம் (Ningaloo solar eclipse) அல்லது ஹைப்ரிட் சூரிய கிரகணம் (hybrid solar eclipse 2023) என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணம் காலை 7:04 மணி முதல் மதியம் 12:29 மணி வரை நடைபெறும். இது இந்தியாவில் தென்படாது என்றாலும், மற்ற நாடுகளில் உள்ள மக்கள் நெடியாக காணலாம். இதை தொடர்ந்து, ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி மற்றொரு சூரிய கிரகணம் நடைபெறும்.
ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்பது என்ன?
ஹைபிரிட் சூரிய கிரகணம் என்பது நெருப்பு வளைய கிரகணம் மற்றும் முழு சூரிய கிரகணத்தின் கலவை ஆகும். சந்திரனின் நிழல் பூமி மீது முழுவதும் விழுந்து நகர்ந்து, மற்றொன்றுக்கு மாறுகிறது. இந்த அரிய வகை கிரகணத்தின்போது, சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சி அளிக்கும். அது 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படுகிறது.
கிரகணத்தை எங்கெல்லாம் தெரியும் - தேதி மற்றும் நேரம்
ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்காசியா, பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஹைபிரிட் சூரிய கிரகணத்தை பார்க்கலாம். இது இந்தியாவில் தென்படாது என்றாலும், நெருப்பு வளையம் ஏற்படும் போது, இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் சில நொடிகள் தெரியும்.
Also Read | இந்த பொருட்களை வீட்டில் வைத்தால் மகிழ்ச்சியும், வளமும் அதிகரிக்கும்!
இதற்கிடையில், முழு கிரகணம் எக்ஸ்மவுத், மேற்கு ஆஸ்திரேலியா, திமோர் லெஸ்டே மற்றும் மேற்கு பப்புவா உள்ளிட்ட இடங்களில் மட்டுமே தெளிவாக தெரியும் என்று space.com தெரிவித்துள்ளது.
சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பதற்கான வழிகள்
கிரகணத்தின்போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்தானது என நாசா தெரிவித்துள்ளது. எனவே, சூரிய ஒளியைப் பார்ப்பதற்கு சிறப்பு கண்ணாடிகளை பயன்படுத்த பரிந்துரைக்கிறது.
கருப்பு பாலிமர், அலுமினிய மைலார், அல்லது நிழல் எண் 14 இன் வெல்டிங் கண்ணாடி உள்ளிட்டவை மூலம் கிரகணத்தை பார்க்கலாம். இருப்பினும், சூரிய ஒளியை வடிகட்டும் ஃபில்டர் கண்ணாடிகள். பாதுகாக்கப்பட்ட சோலார் ஃபில்டர் பொருத்தப்படாத, கேமரா லென்ஸ், பைனாகுலர் அல்லது தொலைநோக்கி போன்றவற்றின் மூலம் கிரகணத்தைப் பார்ப்பது கடுமையான கண் பாதிப்பை ஏற்படுத்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Solar eclipse