Home /News /spiritual /

ஏப்ரம் மாதத்தில் நடைபெறவுள்ள முக்கிய பெயர்ச்சிகளும்... அதனால் ஏற்படும் விளைவுகளும்...

ஏப்ரம் மாதத்தில் நடைபெறவுள்ள முக்கிய பெயர்ச்சிகளும்... அதனால் ஏற்படும் விளைவுகளும்...

கிரகங்கள்

கிரகங்கள்

Astrological Events | ராசி சக்கரத்தில் தனது ஆளும் வீடான மீன ராசிக்கு குரு ஏப்ரல் 13 அன்று பெயர்ச்சி ஆகிறார்..

    கிரகங்களில் பெயர்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு செல்வது, மற்றும் வக்கிரம் அடைவது ஆகியவை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிக அளவில் நடைபெற இருக்கிறது. குறிப்பாக, ஓராண்டுக்கு மேல் ஒரே ராசியில் இருக்கும் கிரகங்களும் , சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகும் கிரகங்களும் இந்த ஏப்ரல் 2022 இல் பெயர்ச்சி அடைகிறது. அது மட்டுமின்றி, அரிதாக ஒரு சில கிரகங்கள் ஒரே வீட்டில் இருப்பதும் இந்த மாதத்தில் ஏற்பட இருக்கிறது. கிட்டத்தட்ட 9 கோள்களும் வேறு ராசிகளுக்கு மாறும் நிலையில், இந்த மாதம் மிகப்பெரிய மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2022 இல் நடைபெற உள்ள முக்கிய பெயர்ச்சிகள் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளலாம். 

    ராகு கேது பெயர்ச்சி ஏப்ரல் 12, 2022 :

    ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது இந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பெயர்ச்சியாகிறது. ராகு ரிஷபத்தில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிகத்தில் இருந்து துலாம் ரசிக்கும் செல்கின்றன. ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை, எனவே இந்த கிரகங்கள் இருக்கும் வீட்டின் தன்மையை பிரதிபலிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டில் ராகு சுக்கிரன் வெட்டிலும் கேது செவ்வாய் வீட்டிலும் இருந்தன. இந்த ஆண்டு ராகு செவ்வாய் ராசியிலும், கேது சுக்கிரனின் ராசியிலும் மாறப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... குருபெயர்ச்சி 2021-2022: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்களை தரபோகிறார் குரு பகவான்?

    குரு பெயர்ச்சி ஏப்ரல் 13, 2022 :

    ராசி சக்கரத்தில் தனது ஆளும் வீடான மீன ராசிக்கு குரு ஏப்ரல் 13ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆகிறார். மீன ராசி பன்னிரண்டாவது ராசியாகும். இது தொலைதூர பயணம், வெளிநாடு மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றைக் குறிக்கும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சனியின் வீடுகளான மகரம் மற்றும் கும்பத்திலிருந்து இப்போது தன்னுடைய சொந்த வீட்டுக்கு செல்லும் குரு பெரும்பாலான ராசியினருக்கு சாதகமான பலன்களை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குரு பகவான்


    சனி பெயர்ச்சி ஏப்ரல் 29, 2022 :

    இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது. மகரம் மற்றும் கும்பம் இரண்டு ராசியுமே சனி ஆட்சி செய்யும் ராசியாகும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மகர ராசியில் ஆட்சி செய்த சனி தற்போது அதிசாரமாக கும்ப ராசிக்கு ஏப்ரல் 29ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். சனி ஆட்சி வீட்டுக்கு பெயர்ச்சி ஆனாலும், ஒவ்வொரு ராசியினருக்கும் இதனால் ஏற்படும் தாக்கம் மாறுபடும்.

    மேலும் படிக்க... சனிப்பெயர்ச்சி எப்போது ? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தர போகிறார் சனி பகவான்...

    ஒரே ராசியில் இருக்கும் கிரகங்களின் அமைப்பு :

    மகர ராசியில் சனி மற்றும் சுக்ரன் மார்ச் 29 முதலே இணைகிறார்கள். சனி மற்றும் சுக்ரன் நட்பு கிரகங்கள் என்பதால், பெரும்பாலும் சாதகமான பலன்கள் எதிர்பார்க்கலாம்.

    ஏப்ரல் 5 அன்று, மகர ராசியில் இருக்கும் சனியோடு செவ்வாய் இணைகிறார். செவ்வாய் மற்றும் சனி ஒரே வீட்டில் இருப்பது அபாயகரமான கிரகங்களின் இணைப்பாக காணப்படுகிறது. குறிப்பாக மகர ராசியில் சனி ஆட்சி பலமும் செவ்வாய் உச்சம் பெற்ற கிரகமாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சனி பகவான்


    மேலும் படிக்க...ராகு, கேது பெயர்ச்சி 2022 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

    ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை மாதப் பிறப்பன்று, ராகுவுடன் உச்சம் பெற்ற சூரியன் இணைகிறது. ராகுவுடன் சூரியன் மற்றும் சந்திரன் இணைவது, கிரகணம் ஏற்படுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது. தமிழ் மாதங்களின் படி, சித்திரை மாதம் முழுவதும், அதாவது மே நடுப்பகுதி வரை இந்த அமைப்பு உள்ளது.

     ராகு கேது பெயர்ச்சி 2022 : 12 ராசியினருக்கான பலன்கள் என்னென்ன?
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி