முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதியில் பெருமாளை இப்படிதான் வணங்க வேண்டுமாம்!

திருப்பதியில் பெருமாளை இப்படிதான் வணங்க வேண்டுமாம்!

பெருமாள்

பெருமாள்

திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நேராக திருமலை மீது உள்ள திருப்பதி சென்று திருவேங்கடனை வணங்குவது வழக்கம்...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும். பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அத்தகைய திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் முறை குறித்து ராமானுஜர் வகுத்துள்ளார்.

1. முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமானை வணங்க வேண்டும்.

2. பின்னர் அலர்மேல் மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து அருள் பெற வேண்டும்.

3. பின்னர் திருமலையின் மீது ‘வராக தீர்த்தக் கரையில்’ வீற்றிருக்கும் ‘வராக மூர்த்தியை’ மனமுறுகி தரிசிக்க வேண்டும்.

4. அதன் பின்னர் தான் மலையப்ப சாமியான திருப்பதி வெங்கடாசலபதியை சேவிக்க செய்ய வேண்டும்.

இந்த வழி முறையை ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இருப்பினும் நம்மில் பலரும் இந்த வழிமுறையை பின்பற்றாமல் முழு பலனையும் அடைவதில்லை.

மேலும் படிக்க... புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் என்னென்ன?

மேலும் படிக்க... புரட்டாசியில் பிறந்தவர்களுக்கான பலன்!

நீங்கள் புதுமண தம்பதிகளா? அப்போ திருப்பதி ஏழுமலையானின் இந்த பிரசாதம் உங்களுக்குதான்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tirupati