கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனை வழிபட முடியாதவர்கள் கூட வீட்டில் இருந்தபடியே அம்மனுக்கு விரதம் இருந்து ராகு காலத்தில் எப்படி பூஜை செய்வது? எந்த கிழமையில் ராகுகால பூஜை செய்தால் என்ன பலனை அடைய முடியும்? என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால் திருமணத்தடை விலகும். கணவன் மனைவி பிரச்சனை நீங்கும். வாழ்க்கையில் உள்ள வறுமை நீங்கி, செல்வ வளம் பெறலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராகு திசை, ராகு தோஷம் உள்ளவர்களுக்கு அதன்மூலம் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் குறையும். இதேபோலவே வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டு வந்தால் தீராத நோய் தீரும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு விரைவாக வேலை கிடைக்கும்.
மேலும் படிக்க... செவ்வாய் கிழமை துர்கையம்மனை வணங்கினால் திருமண தடை நீங்கும்..
இறுதியாக வளர்பிறை அஷ்டமி தினத்தன்று, வரக்கூடிய ராகு கால நேரத்தில் துர்க்கையம்மனை வழிபாடு செய்வதால், சகல சௌபாக்கியத்தையும் நமக்கு பெற்றுத் தந்து, நிம்மதியான வாழ்க்கையை வாழ அருள் புரிவார்
கொரோனா காலமாக இருப்பதால் துர்கையை வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்யலாம்
1. துர்கை அம்மன் படம் வைத்தோ சிலை வைத்தோ வீட்டி வைத்து வழிபடலாம், தவறேதுமில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
2. செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு வீட்டில் இருந்தபடியே மண் அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி திரியிட்டு தீபமேற்றி வாருங்கள். அரளியால் குறிப்பாக செவ்வரளியால் துர்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபடுவது விசேஷம்.
3. எலுமிச்சை பழத்தை எடுத்து நான்காக வெட்டி, அதன் உள்ளே குங்குமத்தை நன்றாகத் தடவி, வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தைச் செய்யலாம். குங்குமம் தடவி தயாராக வைத்திருக்கும் அந்த எலுமிச்சையை உங்களது வலது கையில் எடுத்து, உங்களுடைய தலையை 27 முறை சுற்றிக் கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய வேண்டுதலை, பிரார்த்தனையை துர்கையிடம் மனதாரச் சொல்லி வழிபடுங்கள்.
மேலும் படிக்க... துக்கத்தை போக்கும் துர்க்கை அம்மன்... ராகு காலத்தில்தான் வழிபட வேண்டும் ஏன் தெரியுமா?
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக கைகளாலேயே பிரித்து போட்டு விட வேண்டும். வீட்டிற்கு வெளியே சென்றுதான் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பூஜை அறையிலேயே ஒரு பாத்திரத்தில் உங்கள் தலையை சுற்றி எலுமிச்சைப் பழத்தை நசுக்கி போட்டு விடுங்கள். உங்களை பிடித்த கஷ்டமும் சிக்கலும் அந்த எலுமிச்சைசையுடன் விலகிச் செல்லும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple