• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் முறைகள்

முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் முறைகள்

முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் முறைகள்

முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் முறைகள்

வாரம் ஒரு முறை அந்த ருத்ராட்ச மாலையை எடுத்து பசும்பாலிலோ அல்லது பன்னீரிலோ ஊறவைத்து பின்பு அந்த மாலையை எடுத்து விநாயகருக்கு அணிவிப்பது மிகவும் சிறப்பானது.

  • Share this:
    முழுமுதற் கடவுள் விநாயகரை தினம்தோறும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் புதன் கிழமைகளில் வணங்கினால் மிக மிக சிறந்தது. எல்லோரும் வணங்கக்கூடிய, எல்லோருக்கும் பிடித்தமான கடவுள் என்றால் அந்த வரிசையில் விநாயகருக்கு முதலிடம் தான்.

    விநாயகருக்கு புதன்கிழமை தோறும் சில பொருட்களை கொண்டு பூஜை செய்வதன் மூலம் நமக்கு வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மறைந்து விடிவு காலம் பிறக்கும் என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    சிலருக்கு எந்த ஒரு செயலை எடுத்தாலும் அதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற விநாயகருக்கு புதன்கிழமை அன்று சிகப்பு நிற குங்குமத்தை படைக்க வேண்டும்.

    எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்று நினைத்து, முட்டிமோதி ஒரு தொழிலை ஆரம்பித்து இருப்போம். ஆனால் அதில் முன்னேற்றமே இருக்காது. ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். அடுத்ததாக வேலைக்கு செல்பவர்களுக்கு முன்னேற்றங்கள் இருக்காது. தேவையற்ற நபர்களால் பிரச்சனை வரும். சம்பள உயர்வு இருக்காது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்காது. கொடுத்த கடன் திரும்பி வராது.

    Also Read : விநாயகர் சதுர்த்தி உருவான கதை

    இப்படி நம்முடைய வருமானத்தை தடுக்கும் தடைகளை நீக்க விநாயகருக்கு புதன்கிழமையில் அருகம்புல்லும், வெல்லமும் வாங்கி கொடுக்க வேண்டும். அடுத்ததாக ஈட்டிய செல்வத்தை சேமித்து வைத்துக்கொள்ள, உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கோ அல்லது திருவுருவப் படத்திற்கோ ருத்ராட்ச மாலையை அணிவிக்கலாம்.

    வாரம் ஒரு முறை அந்த ருத்ராட்ச மாலையை எடுத்து பசும்பாலிலோ அல்லது பன்னீரிலோ ஊறவைத்து பின்பு அந்த மாலையை எடுத்து விநாயகருக்கு அணிவிப்பது மிகவும் சிறப்பானது.

    Also Read : விநாயகர் அரசமரத்தடி, குளக்கரையில் அமர்ந்திருக்கும் காரணம் தெரியுமா?

    அடுத்ததாக லட்சுமி தேவியுடன் இருக்கும் விநாயகரின் திருவுருவப் படத்தின் முன்பு ஒரு அருகம்புல்லை வைத்து புதன்கிழமைகளில் செல்வம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, அந்த அருகம்புல்லை சிகப்பு துணி ஒன்றில் வைத்து மடித்து, நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்கள் வீட்டின் பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது.

    இதேபோல் உங்களது வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கு தினம்தோறும் இரண்டு ஏலக்காயை நைவேத்தியமாக படைத்து வருவது மிகவும் சிறப்பான ஒன்று. இப்படியாக நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எல்லா வகையான இன்னல்களுக்கும் விநாயகரை வழிபடுவதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: