• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இன்று திருகார்த்திகை தீபத்திருவிழா... விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

இன்று திருகார்த்திகை தீபத்திருவிழா... விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

பொதுவாகவே, தீபமேற்றும்போது, நல்லெண்ணய் கொண்டு விளக்கேற்றுவதே உத்தமம். எனவே அகல்விளக்கில் நல்லெண்ணெய் விட்டு தீபமேற்றுங்கள். முக்கியமாக, வழக்கமாக பூஜையறையில் ஏற்றப்படும் விளக்கில் பூவைத்து தீபமேற்றுங்கள்

  • Share this:
    திருக்கார்த்திகை தீபம் என்பது ரொம்பவே மகத்துவம் வாய்ந்த திருநாள். இந்தநாளில், விரதம் மேற்கொள்வது நம் வாழ்வை வளப்படுத்தும் என்பது நம்பிக்கை. அதிலும் திருஅண்ணாமலையாரை நினைத்து வழிபட்டால் அனைத்து சம்பத்துகளும் கிடைக்க பெறும் என்பது நம்பிக்கை.

    விரதம் இருக்கும் முறை

    திருக்கார்த்திகை தீபம் நாளில், விரதம் மேற்கொள்வது சிறப்புக்கு உரியது. காலையில் வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பூஜையறையின் விளக்குகளைத் தேய்த்து, அலம்பி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூஜையறையை அலங்காரம் செய்ய வேண்டும்.

    அதனை தொடர்ந்து மாலையில் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுங்கள். மாக்கோலமிடுங்கள். அகல்விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரிவைத்து கொள்ளுங்கள். அத்ன் பின்னர்  திருவண்ணாமலையில் மகாத்தீபம் ஏற்றியயுடன் உங்கள் வீட்டில் தயாராக வைத்துள்ள விளக்குகளிலும் தீபம் ஏற்றுங்கள்... பின்னர் வீட்டு வாசலில், வரிசையாக தீபமேற்றுங்கள்.

    பொதுவாகவே, தீபமேற்றும்போது, நல்லெண்ணய் கொண்டு விளக்கேற்றுவதே உத்தமம். எனவே அகல்விளக்கில் நல்லெண்ணெய் விட்டு தீபமேற்றுங்கள். முக்கியமாக, வழக்கமாக பூஜையறையில் ஏற்றப்படும் விளக்கில் பூவைத்து தீபமேற்றுங்கள்.

    நைவேத்தியம் படைத்தல்

    பொரி உருண்டை நைவேத்தியம் வைத்து படையல் செய்து பூஜை செய்யலாம. அத்துடன் முடிந்தால் நெய் அப்பம், சொஜ்ஜி அப்பம், பாயாசம் என சில இனிப்பு வக்கைகளையும் செய்து படைக்கலாம்.

    பலன்கள்

    அம்மையும் அப்பனுமாகத் திகழும் சிவபார்வதியை மனதார வேண்டிக்கொண்டால், வீட்டில் சகல செளபாக்கியங்களைப் பெறலாம். மேலும் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.  நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது உண்மை. குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    மேலும் படிக்க... திருவண்ணாமலையில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: