• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • அத்திவரதரை தரிசிப்பது எப்படி?

அத்திவரதரை தரிசிப்பது எப்படி?

அத்தி வரதர்

அத்தி வரதர்

4 மாட வீதிகளில் 22 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்அத்தி வரதரை எப்படி தரிசிக்கலாம். யார், யாருக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள 4 கால் மண்டபத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதர், வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

தைலகாப்பு பூசப்பட்டு நாளை காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர், 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார்.

இலவச தரிசனம், 50 ரூபாய் கட்டணம், விஐபிகளுக்கு என 500 ரூபாய் கட்டணம் என்று 3 வழிகளில் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பக்தர்கள் மாலை 5 முதல் 8 மணி வரை வழிபடலாம்

உள்ளூர் பக்தர்கள் ஜூலை 1, 2, 3 உள்பட குறிப்பிட்ட 26 நாட்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரை தரிசிக்கலாம். உள்ளூர் பக்தர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து முன்பதிவு செய்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

காலை 6 முதல் 9 மணி வரை விஐபிகள் தரிசிக்க ஏற்பாடு

இதற்காக 14 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விஐபிக்கள் தினமும் காலை 6 முதல் 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதைத்தொடர்ந்து காலை 9 முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனமாக 50 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 - 5 மணி வரை வெளியூர் மக்களுக்கு அனுமதி

உள்ளூர் மக்களுக்கு என சிறப்பு தரிசனத்திற்காக ஒதுக்கப்பட்ட 26 நாட்களை தவிர பிற நாட்களில் மாலை நேரத்தில் பொதுதரிசன பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம்.

விஐபிக்கள் மேற்கு கோபுரம் வழியாக செல்லலாம்

இலவச தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும் பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர். விஐபி தரிசனத்தில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும் பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக வசந்த மண்டபத்திற்கு வர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக 6 பேட்டரி கார்கள் உள்ளன

மாற்றுத்திறனாளிகளுக்காக 6 பேட்டரி கார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கிழக்கு கோபுரம் வாசல் வழியாக வசந்த மண்டபத்திற்கு அழைத்துசெல்லப்படுவார்கள்.

கோவிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள் தங்களது வாகனங்களை திருமங்கயாழ்வார் சன்னதி, மேற்கு மாடவீதி உள்ளிட்ட இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக ஓரிக்கை, ஒளிமுகமது பேட்டை, பச்சையப்பன் ஆடவர் கல்லூரி ஆகிய 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மினி பேருந்துகளில் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.

வெளியூரில் இருந்து வரும் வாகனங்களையும் தற்காலிக பேருந்து நிறுத்தங்களிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம். தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து 20 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். மினி பேருந்துகளில் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.

சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு

4 மாட வீதிகளில் 22 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க....  இருசக்கர வாகனத்தை சேசிங் செய்த புலி: இணையத்தில் வைரலாகும் வீடியோ





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: