ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல் சார்த்த முடியவில்லையா..? வீட்டில் இருந்தபடி எப்படி வழிபடுவது..?

இந்த மாதம் முழுவதும் அம்பிகை தேவியை சிறப்பித்து பூஜை செய்து வழிபட்டு வருவதால் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல் சார்த்த முடியவில்லையா..? வீட்டில் இருந்தபடி எப்படி வழிபடுவது..?
ஆடி மாதம்
  • Share this:
ஆடி மாதம் என்றாலே அம்பிகைக்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுவதும் அம்பிகை தேவியை சிறப்பித்து பூஜை செய்து வழிபட்டு வருவதால் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்திலேயே ஆடிப்பூரம்தான் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் அந்நாளில்தான் அம்பிகை அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

எனவே அம்பாளை நித்தம் நினைத்து சுமங்கலியாக அலங்கரித்து வளையல் சார்த்தி வழிபடுவது பெண்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


ஆடிப்பூரம் வந்ததற்குப் பின்னால் இருக்கும் கதையைப் பற்றித் தெரியுமா..? வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

இந்த வளையல் சார்த்தும் நிகழ்ச்சியானது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், நெல்லையப்பர், அழகர் கோவில், கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நடைபெறும். அதோடு சிவன் கோவில்களிலும் அம்மனை அலங்கரித்து சிறப்பு வழிபாட்டு பூஜைகள், வளையல் சார்த்துதல் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு என்பதால் அதிக அளவில் பக்தர்கள் கூடாமல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வீட்டில் அம்பிகைப் படங்கள், ஆண்டாள் படங்கள் இருந்தால் அவற்றை தனியே எடுத்து தரையில் மணைப்பலகை வைத்து கோலமிட்டு படங்களை வையுங்கள். பின் அவற்றை மங்களகரமாக அலங்கரியுங்கள். குறிப்பாக ரோஜா பூக்கள், தாமரை , துளசி என சார்த்தி அலங்கரிப்பது உகந்ததாக இருக்கும். அம்பிகைக்கு வளையல் அலங்காரம் மறந்துவிடாதீர்கள்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் எந்தெந்த அம்மனை வணங்கினால் நன்மைகள் வந்து சேரும்..?

பின் பொங்கல், கேசரி என ஏதாவதொரு படையல் செய்து வையுங்கள். 9 சுமங்கலி மற்றும் கன்னிப்பெண்களை அழைத்து அவர்களுக்கு வளையல் அணிவித்து அதோடு மஞ்சள், குங்குமம் , ஜாக்கெட் பிட்டு கொடுங்கள்.

இவ்வாறு செய்வதால் அம்பிகை திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு திருமண அருள் புரிவாள். சுமங்கலிகளுக்கு கணவரின் ஆயுளை நீட்டித்து நோய் நொடியின்று காத்திடுவாள். வீட்டிலும் நன்மைகள் சூழ்ந்து தீமைகள் விலகும்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading