வளையல் வியாபாரிக்கு உதவிய ஆண்டாள் : ஆடிப்பூரத்தில் வளையல் காணிக்கை செய்வதற்கு இதுதான் காரணமா..?
அன்றைய இரவு அவர் தூங்கியபோது கனவில் கைகள் நிறைய வளையல் அணிந்தபடி அம்மன் காட்சியளித்துள்ளார். அந்த வளையல்கள் அனைத்தும் வளையல் வியாபாரி தேடிய வளையல்களாக இருந்தன.

ஆண்டாள்
- News18 Tamil
- Last Updated: July 24, 2020, 3:44 PM IST
ஆடிபூரத்தில் அம்பாளுக்கு வளையல் சார்த்துவதும், வளையல் காணிக்கை, வளையல் மாலை அணிவிப்பதும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு செய்வதற்குப் பின்னால் என்ன காரணம் என்று தெரியுமா..?
இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, ஆந்திராவிலிருந்து சென்னை வந்த வளையல் வியாபாரி, வளையல்களை விற்று விட்டு மீதி வளையல்களுடன் பெரியபாளையத்திற்கு வந்துள்ளார். நடந்த களைப்பில் மரத்தடியில் படுத்து உறங்கியுள்ளார். காலை எழுந்து கண் விழித்து பார்க்கையில் மீதமிருந்த வளையல்களைக் காணவில்லை.
எங்கே போயிற்று என அலைந்து தேடிய அவர் கடைசிவரை வளையல் கிடைக்காததால் திரும்பி ஆந்திராவிற்கே சென்றுவிட்டார். 
பின்பு அன்றைய இரவு அவர் தூங்கியபோது கனவில் கைகள் நிறைய வளையல் அணிந்தபடி அம்மன் காட்சியளித்துள்ளார். அந்த வளையல்கள் அனைத்தும் வளையல் வியாபாரி தேடிய வளையல்களாக இருந்தன.
ஆடிப்பூரத்தில் பெண்களுக்கு வளையல் வாங்கித் தர வேண்டுமா..? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?அந்த அம்மன், உன்னுடைய வளையல்களை நான் தான் அணிந்துகொண்டேன். பெரியபாளையம் வேப்ப மரத்தடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கிறேன். எனது பெயர் ரேணுகா பவானி என்று கூறியுள்ளார்.
அதோடு என்னை வணங்கி வழிபடுவோரின் வாழ்க்கை செல்வம் செழிக்க வாழ்வார்கள் என்று கூறியது மட்டுமன்றி அந்த வளையல் வியாபாரிக்கும் பன் மடங்கு வளையல்களை அளித்துள்ளார்.

உடனே அந்த வியாபாரி பெரியபாளையம் வந்து கனவில் நடந்த விஷயத்தைக் கூற உடனே அங்கு சுயம்புவாக புற்றில் வீற்றிருந்த அம்மனுக்கு சிலை வைத்து கோவில் கட்டியுள்ளனர். அப்படி கட்டப்பட்டதுதான் பெரியபாளையம் ரேணுகா பவாணி அம்மன் கோவில் என்று கூறப்படுகிறது. பின்னாளில் வளையல் வியாபாரிக்கு வியாபாரம் செழித்து செல்வ பலமும் பெருகியுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அம்மனுக்கு வளையல் சார்த்துவதும், காணிக்கை தருவதும் பிரபலமாக வழிப்பட்டு வந்துள்ளனர்.
ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல் சார்த்த முடியவில்லையா..? வீட்டில் இருந்தபடி எப்படி வழிபடுவது..?
அவ்வாறு காணிக்கையாக தரும் வளையல்களை அம்மன் மீது சார்த்திவிட்டு அதை மற்ற பெண்களுக்கு கொடுப்பார்கள். அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பெண்கள் தான் நினைத்த விஷயத்தை வேண்டிக்கொண்டே அணிந்துகொள்ள அது அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கையாக இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனவே நீங்களும் இந்த நல்ல நாளில் அம்பிகையை நினைத்து வளையல் காணிக்கை செலுத்தி பெண்களுக்கு வழங்குங்கள். இதனால் அவர்களுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.