முகப்பு /செய்தி /ஆன்மிகம் / அண்ணாமலையார் கோவிலின் உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா?

அண்ணாமலையார் கோவிலின் உண்டியல் வருவாய் எவ்வளவு தெரியுமா?

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோவிலின் கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் வருவாய் ரூபாய் 1,21,46,133 ரூபாயும், தங்கம் 243 கிராமும், வெள்ளி 979 கிராமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மாதா மாதம் வரும் பெளவுர்ணமி கிரிவலமும், ஆண்டுக்கு ஒருமுறை வரும் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் பக்தர்கள் சென்று வருகின்றனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் போன்றவற்றை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

அதன்படி திருக்கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிவு பெற்று கார்த்திகை மாத தீப திருவிழா உண்டியல் வருவாய் ரூபாய் 1 கோடியே 21,46,133 ரூபாயும்,

தங்கம் 243 கிராமும், வெள்ளி 979 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...11 நாட்கள் காட்சியளித்த திருவண்ணாமலை மகாதீபம் நிறைவு

First published:

Tags: Thiruvannamalai