Home /News /spiritual /

கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை என்ன செய்யலாம்...

கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை என்ன செய்யலாம்...

எலுமிச்சை

எலுமிச்சை

Temple Lemon | கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை கனியை பிழிந்து சாற்றில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்கலாமே தவிர அதில் எக்காரணத்தை கொண்டும் உப்பு கலந்து குடிக்கக் கூடாது

    எழுமிச்சை பழத்திற்கு ‘தேவ கனி’ என்ற பெயர் உண்டு. இதனை தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி என்றும் கூறலாம். எழுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. அத்துடன் எழுமிச்சை பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி உண்டு. அதனால் தான் இது தேவ கனியாக சொல்லப்படுகிறது. இந்த எழுமிச்சை பழத்தை நல்ல சக்தியை பெறவும், தீய சக்தியை ஏவி விடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எழுமிச்சை பழத்தை கோவிலில் கொடுக்கும் போது அதன் சக்தி நல்ல சக்தியாக வழுபெற்று இருக்கும். அவ்வாறு கோவிலில் கொடுக்கப்படும்  எழுமிச்சை பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து என்ன செய்யலாம்?  என்று பலருக்கும் தெரிவதில்லை. அதை பற்றி இப்பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

    1. அம்மன் கோவில்களில் எலுமிச்சை பழத்தை பிரசாதமாக கொடுப்பது வழக்கம். அப்படி பெறப்படும் இந்த எலுமிச்சை பழம் தெய்வ அருளை பெற்றது என்பது நம்பிக்கை, அதனை நமது வீடுகளில் கொண்டு வந்து வைப்பது வழக்கம்.

    2. அந்த எலுமிச்சை பழத்தை நாம் பயன்படுத்தலாமா அல்லது அப்படியே வைத்திருக்கலாமா என்ற சந்தேகம் நம் எல்லாருக்கும் இருக்கிறது.

    3. முதலில் இதனை எல்லாரும் வாகனங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அவரவர் வாகனங்களில் வைத்து கொள்வதுண்டு.

    4. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட எலுமிச்சை பழங்கள் இருந்தால். அதனை அப்படியே வைத்திருக்க வேண்டியதில்லை. சாறு பிழிந்து குடிக்கலாம். அந்த எலுமிச்சை கனி சாற்றில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்கலாமே தவிர அதில் எக்காரணத்தை கொண்டும் உப்பு கலந்து குடிக்கக் கூடாது.

    5. சாதாரணமாக சிலர் எலுமிச்சை பழத்துடன் உப்பு கலந்து குடிப்பார்கள். ஆனால் கண்டிப்பாக கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தில் மட்டும் அவ்வாறு செய்யக் கூடாது.

    6. அதுபோல கோவிலில் இருந்து பிரசாதமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுவரும் எலுமிச்சை பழத்தை கொண்டு திருஷ்டி சுத்தி போட பயன்படுத்தக் கூடாது. வீட்டில் உள்ள எலுமிச்சை பழத்தை திருஷ்டி சுத்த பயன்படுத்தலாமே தவிர, கோவிலில் கொடுத்ததை கண்டிப்பாக அவ்வாறு செய்யக் கூடாது.

    7. கோவிலில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாம். ஆனால் வீட்டில் எழுமிச்சையால் கண்டிப்பாக தீபம் ஏற்றக் கூடாது.

    8. எழுமிச்சைக்கு இருக்கும் சக்தி அளப்பரியது. மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள். சுப காரியதிற்கு செல்லும் போதோ, வெற்றியை நோக்கி செல்லும் போதோ இந்த கனிகளை அம்மன் கோவில் வாசல் முன்னர் இருக்கும் திரிசூலத்தில் சொருகி விட்டு போனால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

    9. அம்மனுக்கு எழுமிச்சம் மாலை சாற்றுவது குடும்ப ஒற்றுமைக்கு நல்லது. குழந்தை பாக்கியம் கிடைக்க தம்பதியர்கள் எழுமிச்சைபழ மாலை அம்மனுக்கு வேண்டிக் கொண்டு சாற்றலாம்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple, Lemon

    அடுத்த செய்தி