Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு ஏதாவது அதிசயம் நடக்கும்... ( மார்ச் 01, 2022)

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு ஏதாவது அதிசயம் நடக்கும்... ( மார்ச் 01, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan : உங்கள் முடிவுகள் பாராட்டப்படாமல் போகலாம். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதை நெருங்கிய ஒருவர் கவனித்து, அதிலிருந்து புரிந்துகொள்வார்.

மேஷம்:

மேலதிகாரிகளின் பார்வையில் வேறுபாடுகள் இருக்கலாம். இன்று சில போட்டி மனப்பான்மை நிலவும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பழைய நிறுவனம் அல்லது நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் வணிகத் திட்டங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நான்ஸ்டிக் மேற்பரப்பு

ரிஷபம்:

கெட்ட கனவுகள் இருந்தால், அடுத்த நாள் காலையில் அதைப் பற்றி விவாதித்து அதிலிருந்து விடும்படும் வழியை பாருங்கள். ஏனெனில் இன்று உங்கள் ஆற்றல்களை நேர்மறையாக வைத்திருப்பது முன்னேற உதவும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நீங்கள் காத்திருந்தால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பல கிளிகள்

மிதுனம்:

உங்கள் நேர்மை ஆரம்பத்தில் கவனிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அந்த குணம் நிச்சயமாக உங்களுக்கு பணத்தை கொடுக்கப் போகிறது. இன்று நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வெளியாட்களின் விதிமுறைகள் எதிர்பார்த்ததை விட கடினமாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மெக்சிகன் உணவு

கடகம்:

சில சிறிய சிக்கல்கள் உங்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கலாம். அவற்றை ஒவ்வொன்றாகக் கையாள்வது உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும். உங்கள் பிள்ளைகள் சில அனாவசிய கோரிக்கைகளை உங்கள் முன் வைப்பார்கள். அதைப் பற்றி அவர்களுக்குப் புரிய வைப்பதில் உறுதியாக இருங்கள். நண்பர்களுடன் இன்று வெளியே செல்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பசை துப்பாக்கி

சிம்மம்:

நம் வாழ்விலும் அதிசயம் நடக்குமா என நீங்கள் நினைத்திருந்தால், இன்று அது நிறைவேறும். இன்று உங்களுக்கு ஒரு எளிய நாளாக இருக்கும். உங்களுக்கு சில ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பண விவகாரங்கள் சீராக இருக்கும். நீங்கள் இன்று பரிசுகளை பெற வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிரமிடு

கன்னி:

உங்கள் தினசரி இயந்திர வாழ்க்கையால் சோர்வாக உணர்வீர்கள். மேலும் சுவாரஸ்யமாக ஏதேனும் செய்ய நினைப்பீர்கள். அதற்கு முன்னெப்போதையும் விட நீங்கள் உட்கார்ந்து பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும். இந்த ஆண்டு உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வானவில்

துலாம்:

உங்கள் வாழ்க்கையில் புதிதாக நுழைந்த ஒருவருடன் உங்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் வணிகத் திறன்கள் மூலம் பிறரிடம் பாராட்டை பெறுவீர்கள். குறிப்பாக உங்கள் பெற்றோரிடமிருந்து கைதட்டலைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் உறவில் இருந்தாலோ அல்லது காதல் உறவில் ஈடுபட ஆர்வமாக இருந்தாலோ, அதில் இறங்குவதற்கு முன்பு கூடுதல் விருப்பங்களை ஆராயுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு விளக்கு

விருச்சிகம்:

உங்கள் சிந்தனை செயல்பாட்டில் ஏற்படும் திடீர் மாற்றம் சில முடிவுகளை மாற்றுவதற்கு வழிவகுக்கும். நீங்கள் ஏதேனும் சமூகம் சார்த்த திட்டத்தில் பணிபுரிந்தால், அது இன்று நன்றாகத் தொடங்கும். புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு சிறிய தடை இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தோட்டம்

தனுசு:

இனியும் தள்ளிப்போடுதல் தவறான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும். சட்ட ரீதியான விஷயங்களில் தாமதம் ஏற்படலாம். ஒருவருடன் ஒத்துழைக்க முயற்சிப்பவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் வரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரூபி சிவப்பு கல்

மகரம்:

நீங்கள் உண்மையிலேயே விரும்பிய ஒன்றை உங்கள் பெற்றோர் ஒதுக்க வாய்ப்புள்ளது. காரணம் என்ன என்பதை இன்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் நெருக்கமாக இருக்கும் ஒருவர் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போகலாம். ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மென்மையான துணி

கும்பம்:

உங்களுக்கு நெருக்கமான ஒருவர் மீது இருக்கும் அக்கறை போதுமானதாக இருக்காது. இன்று நீங்கள் எரிச்சல் உணர்வோடு இருப்பதை உணர்வீர்கள். அதிருப்தியின் எண்ணங்கள் அதிகம் உள்ளன. நீங்கள் உங்கள் சொந்த இரட்சகர் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு மொட்டை மாடி

மீனம்:

உங்கள் முடிவுகள் பாராட்டப்படாமல் போகலாம். நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதை நெருங்கிய ஒருவர் கவனித்து, அதிலிருந்து புரிந்துகொள்வார். உங்களுக்கு அதிகாரம் இருந்தால், உங்கள் ஆலோசகரை மறுபரிசீலனை செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு செப்பு ஜாடி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Rasi Palan

அடுத்த செய்தி