Home /News /spiritual /

மிதுனம் ராசி: 2022 ஆம் ஆண்டு நன்மையும் தீமையும் கலந்தவாறு நடக்கும் | புத்தாண்டு பலன்கள்

மிதுனம் ராசி: 2022 ஆம் ஆண்டு நன்மையும் தீமையும் கலந்தவாறு நடக்கும் | புத்தாண்டு பலன்கள்

New Year 2022 Rasi Palan in Tamil | 2022 புத்தாண்டுக்கான ராசிபலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

New Year 2022 Rasi Palan in Tamil | 2022 புத்தாண்டுக்கான ராசிபலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

New Year 2022 Rasi Palan in Tamil | 2022 புத்தாண்டுக்கான ராசிபலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  மிதுன ராசி அன்பர்களே! இந்த ஆண்டு நன்மையும் தீமையும் கலந்தவாறு நடக்கவே வாய்ப்புண்டு. குறிப்பாக நன்மைகளில் திடீர்ப் பொருள் வரவுக்கு இடமுண்டு. தீமைகளில் நண்பர் ஒருவர் விரோதி ஆகலாம். பொதுவாக சுபிட்சம் உண்டு. தொழில் சிறப்படையும், நிலபுலன்கள் விஷயத்தில் ஆதாயம் காணலாம். தெய்வ பலம் நல்லவிதமாக அமைந்துள்ள இந்த நேரத்தில் தெய்வப்பணி, தருமப்பணி போன்ற சத்காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ வாய்ப்புண்டு.  குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். உறவினர்கள் வருகையும் இருக்கும். சுப காரியங்கள் நன்றாக நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம். மேலதிகாரிகளின் உள்ளம் குளிர நடந்து கொண்டால் தீமை குறையும். உழைப்பாளிகளுக்கு உரிய கௌரவம் கிட்டும்.

  வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு. உபத்திரவம் ஏதும் உண்டாகாது. தொழிலில் மேன்மை உண்டாகும். தொழிலாளர்களுக்கும் ஆதாயமான சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் மகிழச்சி தரும்.

  அரசியல்வாதிகள் அவசரப்படாமல் நடந்து கொள்வது நல்லது. வேண்டிய நண்பர் ஒருவர் மனஸ்தாபத்துக்கு உள்ளாக நேரலாம். பெருந்தன்மையோடு நடந்து கொண்டு அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டியது அவசியம்.

  கலைத்துறையில் சீரான போக்குக்குத் தடை உண்டாகாது. எந்தப் புது முயற்சியும் வெற்றியை நோக்கியே செல்லும். அன்றாட பணிகளை மட்டும் சிரத்தையோடு செய்து வாருங்கள். அன்றாட வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகத் தடையிராது.

  பெண்கள் எதிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியம். வரவு அறிந்து செலவு செய்தால் பணக்கஷ்டம் உண்டாக வாய்ப்பில்லை. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது ஓர் அமைப்பு காக்கும்.

  மாணவர்களில் பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்குப் புதிய சாதனைக்கான முயற்சிகள் கைகூடிவரும். கல்விப்பயனை மிகுந்த பிரயாசைப்பட்டேனும் பெற்று விடுவர். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

  கிரகநிலை:

  ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

  கிரக மாற்றங்கள்:

  21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  14-04-2022 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

  மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்:

  இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு.  தொழிலில் மந்த நிலை இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் சரியாகும். பொருளாதாரத்தில் தொல்லை ஏற்படாது. பணக் கஷ்டம் வராமல் இருக்கும்.  கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாட பணிகள் சரிவர நடக்கும். தெய்வ வழிபாடு மனத்துக்குத் தெம்பு தரும்.  அரசு உத்தியோகஸ்தர்கள் விரும்பத்தக்க உத்தரவுகளைப் பெறலாம். அரசாங்க காரியங்களில் தாமதம் தவிர்க்க முடியாமற் போகலாம்.

  திருவாதிரை:

  இந்த ஆண்டு உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம். தேவையில்லாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தங்கள் நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும்.  நற்பலன்கள் அதிகளவில் நடக்கும் என்றாலும், சிறிதளவு மனசங்கடங்கள் உண்டாக வாய்ப்புண்டு. பொருளாதாரக் குறை உண்டாகாது. அந்தஸ்து பாதிக்கப்படாது. குடும்பத்தில் சுபகாரியம் நடக்கலாம். வேலை இல்லாதோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

  புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:

  இந்த ஆண்டு உங்களுடைய வாழ்வில் சில நற்பலன்கள் ஏற்பட்டே தீரும். அந்த நன்மைகளை நேர்வழியில் சென்றே உங்களால் பெறமுடியுமாதலால் குறுக்கு வழியில் முயற்சிக்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு ஒரு சறுக்கல் ஏற்படுமானாலும் நிமிர்ந்து விடுவார்கள். விவசாயிகளுக்கு உன்னதமான நேரம் இல்லை என்றாலும் உபத்திரவம் பெரிதாக உருவாகாது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகம் உண்டாகும்.

  பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

  சிறப்பு பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றவும்.

  அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

  செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் மற்றும் திவ்யதேசங்கள்

  சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:”

  மேலும் படிக்க... இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு 2022 அதிர்ஷ்ட ஆண்டு!

  இந்த புத்தாண்டில் நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்க சில டிப்ஸ்! 

  2022 புத்தாண்டுக்கான ராசிபலன்களை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: New Year Horoscope, New Year Horoscope 2022, Rasi Palan

  அடுத்த செய்தி