• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ராசி அடிப்படையில் உங்கள் குணமும் ஆளுமையும் எப்படி இருக்கும்..?

ராசி அடிப்படையில் உங்கள் குணமும் ஆளுமையும் எப்படி இருக்கும்..?

ஜோதிடம்

ஜோதிடம்

ஒருவருடைய ஆளுமையை வடிவமைப்பதில் நட்சத்திரங்களும், கிரகங்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஒருவரின் ராசியை அடிப்படையாக கொண்டே அவரது ஆளுமையானது அமைவதாக கூறுகிறது ஜோதிடம் நீங்கள் ஒரு சிம்ம ராசிக்காரராகவோ அல்லது விருச்சிக ராசி கொண்டவராகவோ இருப்பதை பொறுத்து உங்கள் குணாதிசயங்கள் மற்றும் ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது.

  • Share this:
தினசரி செய்தித்தாள்கள் அல்லது டிவி-யில் அன்றைய ராசி பலன்களை பார்த்து விட்டே பலரும் நாளை துவங்குகின்றனர். ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அவர்களை பார்த்தால் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் எதுவும் அவரவருக்கு நடக்கும் வரை வேடிக்கையாக மட்டுமே இருக்கும். ஏனென்றால் நம் முன்னோர்கள் வான சாஸ்திரத்தில் வல்லவர்களாக திகழ்ந்தவர்கள் என்பதற்கான ஏராளமான வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. ஜோதிடத்தை நம்பாதோருக்கு அதை பற்றி நன்கு அறிந்தவர்கள் சொல்லும் ஓர் வார்த்தை பொய்யான ஜோதிடர்கள் இருக்கலாம், ஆனால் பொய்யான ஜோதிடம் இல்லை என்பதே.

ஒருவருடைய ஆளுமையை வடிவமைப்பதில் நட்சத்திரங்களும், கிரகங்களும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஒருவரின் ராசியை அடிப்படையாக கொண்டே அவரது ஆளுமையானது அமைவதாக கூறுகிறது ஜோதிடம் நீங்கள் ஒரு சிம்ம ராசிக்காரராகவோ அல்லது விருச்சிக ராசி கொண்டவராகவோ இருப்பதை பொறுத்து உங்கள் குணாதிசயங்கள் மற்றும் ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் ராசிக்கான குணாதிசியங்கள் மற்றும் ஆளுமைகள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் எல்லாவற்றையும் எப்போதும் உற்சாகமாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் பிடிவாதம், உறுதியாக காணப்படுவார்கள். தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்தும் திறனில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர். தங்களின் குறிக்கோள்களை அடைவதற்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள எப்போதும் தயாராக உள்ளனர். நினைத்தபடி விஷயங்கள் நடக்காத போது எளிதில் பொறுமையிழந்து மிகவும் எரிச்சலடையும் தன்மை கொண்டவர்கள். குறிப்பாக மிகவும் மெதுவாக செயலாற்றுபவர்களை வெறுப்பார்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் நம்பகத்தன்மை மற்றும் பொறுமை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள். மேலும் இவர்கள் எப்போதும் ப்ராக்டிக்கலாக இருக்க கூடியவர்கள். பெரும்பாலும் செய்யும் வேலைகளை ஈடுபாட்டுடன் செய்து மகிழ்வார்கள். எந்தவொரு குறிப்பிட்ட முயற்சிக்கும் கட்டாயம் தேவையான நேரத்தை செலவிடுவார்கள். இவர்கள் மிகவும் நம்பகமான ஊழியர்கள் மற்றும் நண்பர்களாக இருப்பார்கள். மறுபக்கம் மிகவும் உறுதியானவர்களாக இருப்பார்கள். தங்கள் சொந்த சிந்தனை வழியை கெட்டியாக பிடித்து கொள்ளும் இவர்கள், தங்கள் சூழல் திடீரென மாறுவதை விரும்பமாட்டார்கள்.



மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்கள் மிகவும் அர்ப்பணிப்புள்ள நபர்களாக இருப்பார்கள். மேலும் இயற்கையாகவே பாச குணமுள்ளவர்கள். பார்ப்பவர்கள் அனைவரிடமும் இனிமையாக பழகி அரட்டை அடிப்பதை விரும்புவார்கள். ஓபன் மைண்ட் செட் கொண்டவர்கள். இந்த குணங்கள் காரணமாக இது அவர்களை சிறந்த எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் ஆக்குகிறது. மேலும் புதிய நபர்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் தகுந்தவாறு மாறி கொள்வார்கள். தங்கள் வாழ்க்கையில் பலவற்றை நாடும் குணமுடையவர்கள்.

Relationship Tips : என்னதான் துணையாக இருந்தாலும் சில விஷயங்களை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வது நல்லது..!

கடகம்:

ஆங்கிலத்தில் கேன்சர் என்றழைக்கப்படும் கடக ராசிக்காரர்கள் வலுவான உணர்ச்சிகளுடன் தொடர்புடையவர்கள். இது நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகளாக இருக்கலாம். இவர்களின் பொதுவான நற்பண்புகள் என்று பார்த்தால் பக்தியும், பச்சாதாபமும் உடையவர்கள். இரக்க குணம் காரணமாக துன்பத்தில் இருக்கும் நபர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் சில நேரங்களில் இவர்கள் பொறுமையற்றவர்களாகவும், சுயநலமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும், அனைவராலும் கவனிக்கப்படுபவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். புகழ் வெளிச்சத்தில் இருக்கும் வகையிலான வாழ்க்கையை வாழ ஆசைப்படுவார்கள். கற்பனை திறனுடையவர்கள் மற்றும் நகைச்சுவையானவர்கள். மேலும் பேரார்வம் கொண்டவர்கள். தியேட்டருக்கு செல்வது, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது, ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பது என்று வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பார்கள். எல்லோர் கவனமும் தங்கள் மீது இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பதால், ஒருவரால் தங்கள் புறக்கணிக்கப்படும் சூழலை இவர்களால் எளிதில் கையாள முடியாமல் தவிப்பார்கள்.



கன்னி:

இந்த ராசிக்காரர்கள் விடாமுயற்சி மற்றும் சரியாக ஒழுங்கமைக்கப்பட்ட நபர்களாக இருப்பார்கள். தகவல்கள் மற்றும் விவரங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்கள் பொதுவாக தங்களை தாங்களே பகுப்பாய்வு செய்து மிகவும் விமர்சித்து கொள்கிறார்கள். மிகப்பெரிய முடிவுகளை எடுப்பதற்குள் தங்களுக்குள் பெரும் மனப்போராட்டம் மற்றும் அழுத்தத்தை அனுபவிப்பார்கள். அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், கனிவானவர்களாகவும் இருந்து தங்களின் பரந்த மனதை வெளிக்காட்டுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் பார்க்கும் வேளைகளில் எழுத்து தொடர்பான வேலைகள் முக்கியமானதாக இருக்கும்.

துலாம்:

இந்த ராசியின் கீழ் பிறந்த எவரும் மக்களின் நபர் என்று குறிப்பிடப்படுகிறார்கள். எப்போதும் கூட்டமாக இருப்பதையே விரும்புவார்கள். பெரும்பாலும் தனியே வெளியே போவதையும், தனிமையையும் வெறுக்கிறார்கள். தனித்துவத்தை முக்கியமாக நினைக்கும் இவர்கள், தான் யார் என்பதை தனித்துவத்தின் மூலம் வெளிப்படுத்தி அதனால் பெருமை அடைவார்கள். மென்மையான மற்றும் நியாயமான எண்ணம் கொண்டவர்கள், அவர்கள் எல்லா விலையிலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்ப்பார்கள். கருத்து வேறுபாடுகளை தவிர்க்க பார்ப்பார்கள்.

விருச்சிகம்:

இவர்கள் உண்மைகள் மீது அக்கறை கொண்டுள்ளனர் மற்றும் அதிகம் உண்மையை பேசுகிறார்கள். எனவே நம்பகமான நபர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் வளமாகவும் உற்சாகமாகவும் எப்போதும் இருக்கிறார்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தை கூறினால் அது ஒருபோதும் வெளியே லீக் ஆகாது. ஆனால் இந்த ரகசியம் மறுபுறம் ஒரு எதிர்மறை பண்பாக கருதப்படலாம். இந்த ராசிக்காரர்களுக்கே உரிய ஒரு குணம் அதிகம் பொறாமைப்படுவது. தங்களது பொறாமை குணத்தால் உறவுகளிடையே பிரச்சனையை ஏற்படுத்தி கொள்வார்கள்.



தனுசு:

நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்ட திறந்த மனதுடையவர்களாக இருக்கும் தனுசு ராசிக்காரர்கள், புதுப்புது இடங்களுக்கு செல்வது, புதிய மக்களை பார்த்து பழகுவது, பயணம் செய்வது உள்ளிட்டவற்றில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு தொன்று யோசனையை உடனடியாக செயல்படுத்த வேலையே துவக்கி விடுவார்கள். இருப்பினும் அவர்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கும் பழக்கம் கொண்டவர்கள். மடறவர்கள் தங்களை கட்டுப்படுத்துவதை இந்த ராசிக்காரர்கள் துளியும் விரும்ப மாட்டார்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் சுயஒழுக்கம் மற்றும் பொறுப்பு நிறைந்தவர்கள். சரியான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான திறன் பெற்றவர்கள். இவர்கள் சிறந்த சுய கட்டுப்பாட்டைக் கொண்டவர்கள். இது பாராட்ட கூடிய ஒரு விஷயமாக இருந்தாலும், இது அவர்களை அன்னியபடுத்தி காட்டும். இசையை ரசிக்கும் மற்றும் பெரிதும் விரும்பும் மகர ராசிக்காரர்கள் எப்போதும் அவர்களது குடும்பத்திற்கு அதிக முன்னுரிமை அளிப்பார்கள்.

Afternoon Nap : உங்களுக்கு மதியத்தில் தூங்கும் பழக்கம் இருக்கா..? உங்களுக்கான குட் நியூஸ்..!

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள். அர்த்தமுள்ள உரையாடல்களையும் மற்றவர்களுக்கு உதவுவதையும் அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். எனினும் கூச்ச சுபாவமுடையவர்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான இடங்களில் கூச்சத்தை வெளிகாட்ட மாட்டார்கள். கலை மதிப்புள்ள விஷயங்களில் ஆர்வம் செலுத்துவார்கள். தங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து நபர்கள் பற்றியும் அக்கறையும், கவலையும் கொள்வார்கள்.

மீனம் :

மீன ராசிக்காரர்கள் அன்பு மற்றும் இரக்கம் நிறைந்தவர்கள். இரக்கத்தையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வேறொருவரின் வாழ்க்கையை எளிதாக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். காதல் மற்றும் இசையில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் யதார்த்தத்திலிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளவர்கள் ஏமாற்றினாலும் கூட மீண்டும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடையைவர்கள்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: