• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

Rasi Palan : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

தனுசு

தனுசு

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 18, 2021 - April 24, 2021

  • Share this:
    தனுசு: இந்த வாரம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

    குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினர் அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது. வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்து போட்டு வைக்காதீர்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்:  வியாழன், வெள்ளி

    பரிகாரம்: அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: