• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan: : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

Rasi Palan: : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை

ரிஷபம்

ரிஷபம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 18, 2021 - April 24, 2021

  • Share this:
    ரிஷபம்: இந்த வாரம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும்.

    கலைத்துறையினர் புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

    பரிகாரம்:  வெள்ளிக்கிழமை அன்று நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: